Just In
உ.பி.யில் நள்ளிரவில் பயங்கரமான விபத்து.. கார் மீது லாரி மோதியதில் 14 பேர் உயிரிழப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் நள்ளிரவில் மிக பயங்கரமான விபத்து நடந்துள்ளது.

பிரதாப்கர் பகுதியில் உள்ள பிரதாப்கர்: மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் 6 குழந்தைகள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.