லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த மீட்டிங் மனுஷனுக்காக இல்ல மாட்டுக்காக.. போலீஸ் கொலையில் யோகி போட்ட ஆர்டரை பாருங்க!

உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டதா உ.பி கலவரம் ?

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் நேற்று முதல்நாள் பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர். பசுக்காவலர்கள் நடத்திய கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொடூர கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை இந்தியா முழுக்க ஏற்படுத்தி இருக்கிறது.

    மீட்டிங் போட்டார்

    மீட்டிங் போட்டார்

    இதற்காக நேற்று ஆதித்யநாத் வேகவேகமாக மீட்டிங் போட்டார். இதில் அந்த கலவரத்தை ஒடுக்கச்சென்ற போலீசார் அனைவரும் கலந்து கொண்டனர். அதேபோல் போலீஸ் உயரதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

    இதுக்குதான்

    இதுக்குதான்

    ஆனால் இதில் பசு படுகொலை குறித்துதான் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பசுக்கொலையை செய்தது யார் என்று ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார். பசுக்கொலைக்கு பின் இருப்பவர்கள் யார் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டார்.

    கண்டிப்பு

    கண்டிப்பு

    அதோடு இதுகுறித்து சீக்கிரமாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடக்கும் பசுக்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. என்ன நடந்தாலும் பசுக்கொலைகளை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

    ஒரு வார்த்தை பேசாதே

    ஒரு வார்த்தை பேசாதே

    இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால், இந்த கலவரத்தில் நடந்த போலீஸ் கொலை தொடர்பாக அந்த சந்திப்பில் பேசவே இல்லை. ஆம், அந்த சந்திப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகளும், முதல்வரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஆலோசனையில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் வடஇந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    UP CM Adityanath asks to take action against Cow Slaughter, not against cop’s killers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X