லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அகிலேஷ்-மாயா கூட்டணிக்கு அமோக ஆதரவு... பிரியங்கா தேற மாட்டாராம்... பாஜக கதி? கருத்து கணிப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இணைந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு அமோக ஆதரவு உள்ளதாக டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லி பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையைச் சேர்ந்த 25 மாணவர்கள் குழு உத்தரப்பிரதேசத்தில் 37,439 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜக மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் விவரம்:

அடிக்கிற வெயிலுக்கு பேசாம காலை 5.30-க்கு வாக்குப்பதிவை துவக்குங்க.. உச்சநீதிமன்றம் யோசனை அடிக்கிற வெயிலுக்கு பேசாம காலை 5.30-க்கு வாக்குப்பதிவை துவக்குங்க.. உச்சநீதிமன்றம் யோசனை

 சமாஜ்வாதி-பகுஜனுக்கு ஆதரவு

சமாஜ்வாதி-பகுஜனுக்கு ஆதரவு

பாரதிய ஜனதா கட்சிக்கு 37% பேர் ஆதரவு (13,974) தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சமாஜ்வாதி- பகுஜன் அணிக்கு 44% (16,341 பேர்) ஆதரவு தெரிவித்துள்ளனர். எஞ்சிய 19% (7,124 பேர்) -ல் 15% பேர் காங்கிரஸுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

 பிரியங்காவுக்கு ஆதரவு இல்லை

பிரியங்காவுக்கு ஆதரவு இல்லை

2014 லோக்சபா தேர்தலில் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வென்றது. இதனால் இம்முறை கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கு பொதுச்செயலராக பிரியங்கா காந்தியை களம் இறக்கியது காங்கிரஸ். ஆனாலும் பிரியங்கா காந்தியின் வருகையால் காங்கிரஸுக்கு எந்த பயனும் இல்லை என்பதையே கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 பாஜகவும் மக்கள் மனநிலையும்

பாஜகவும் மக்கள் மனநிலையும்

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வாக்காளர்கள் ஆதரிக்கின்றனர். ஆனால் வேலைவாய்ப்பின்மை, ரபேல் விவகாரம், விவசாயிகள் வருமானம் இழப்பு ஆகியவை பாஜக ஆதரவு வாக்காளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது என்பதும் கருத்து கணிப்பின் முடிவு. கடந்த 2014-ம் ஆண்டு மோடிக்கு இருந்த ஆதரவு இப்போது குறைந்திருக்கிறடு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 எந்த பகுதியில் செல்வாக்கு?

எந்த பகுதியில் செல்வாக்கு?

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூர், முசாபரகர், கைரானா, பிலிபித் பகுதிகளில் பகுஜன்சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணிக்கு 51% ஆதரவும் பாஜகவுக்கு வெறும் 29% ஆதரவும்தான் உள்ளது. இப்பகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

 மத்திய உ.பி.யில் பாஜக நிலை

மத்திய உ.பி.யில் பாஜக நிலை

லக்னோ, ஃபரூக்காபாத், ரேபரேலி உள்ளிட்ட மத்திய உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் அணிக்கு 46% ஆதரவும் பாஜக அணிக்கு 33% ஆதரவும் இருக்கிறதாம். இங்கு இன்னும் 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. ரேபரேலியில் பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணி போட்டியிடவில்லை.

 கிழக்கு உ.பி. நிலவரம்

கிழக்கு உ.பி. நிலவரம்

வாரணாசி உள்ளிட்ட கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 50% ஆதரவும் மாயாவதி- அகிலேஷ் அணிக்கு 36% ஆதரவும் இருக்கிறது. அனைத்து பிரதேசங்களிலும் மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு 15% ஆதரவு இருக்கிறது என்கிறது டெல்லி பல்கலைக் கழக கருத்து கணிப்பு முடிவுகள்.

English summary
Delhi University students’ poll among 38,000 voters in Uttar Pradesh has found that 44 per cent of people support the BSP-SP alliance, and Priyanka Gandhi Vadra has not benefitted the Congress party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X