லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பனிமனிதனை கூட பார்த்துட்டோம்.. ஆனால் பிரதமர் சொன்ன அந்த நல்ல நாளைத்தான் காணோம்.. அகிலேஷ்

Google Oneindia Tamil News

லக்னோ: பனிமனிதனை கூட பார்த்துவிட்டோம். ஆனால் பிரதமர் சொன்ன அந்த நல்ல நாட்களைத்தான் காணோம் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இமயமலையில் பனிமனிதனின் கால்தடம் பதிந்துள்ளதாக இந்திய ராணுவத்தினர் அதிகாரப்பூர்வமாக படங்களுடன் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் முதல் முறையாக இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனி மனிதனின் பாதச்சுவடுகளை பார்த்தோம்.

அந்த பாதச் சுவடுகள் 32-க்கு 15 அங்குலம் இருந்தது. இது போன்ற மிகவும் பார்க்க அரிதான இந்த கால்சுவடுகள் மேகலு பரூன் தேசிய பூங்காவில் மட்டுமே கடந்த காலங்களில் பார்த்துள்ளோம் என அந்த டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது.

ரபேல்: அனல் பறந்த வாத, விவாதம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்டார் ரபேல்: அனல் பறந்த வாத, விவாதம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்டார்

40 பேர்

இதை டேக் செய்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் பனிமனிதனை கூட பார்த்துவிட்டோம். ஆனால் மோடி சொன்ன நல்ல நாட்களைத்தான் காணோம் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று கொல்கத்தாவில் மோடி பேசியிருந்தார்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இதை அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில் வளர்ச்சி எங்கே என கேட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் பிரதமரோ அறுவறுக்கத்தக்க பேச்சுகளை பேசி வருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

40 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது குறித்து பேசி வருகிறார். அவரை 72 மணி நேரம் அல்ல. 72 வருடங்களுக்கு தடை செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

நல்ல நாட்கள்

நல்ல நாட்கள்

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டனர். எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்ல நாட்கள் பிறக்கும் என்று நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.

English summary
Akhilesh Yadav says that It seems that "Acche Din" are more elusive than the Yeti after reading Indian Army's tweet on Snowman's foot print.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X