லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு.. உ.பி.யில் கங்கை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி எனும் பனியாறு உருகியது. இதையடுத்து அலக்நந்தா நதிப்பாலம் சேதமடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Alert for UP districts on Ganga riverbanks

அங்கு ரிஷிகங்கா மின் திட்டத்திற்காக பணியாற்றி வந்த 150 தொழிலாளர்களின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மீட்புத் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

அதில் பேரிடர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கங்கை நதிக்கரையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தவுலி கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜோஷிமத்- மலாரி பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

உத்திரகாண்ட் சம்பவம்..அவசர உதவி எண்கள்...முதல்வர் ராவத் அறிவிப்பு உத்திரகாண்ட் சம்பவம்..அவசர உதவி எண்கள்...முதல்வர் ராவத் அறிவிப்பு

இந்த பாலம் எல்லை பகுதிகளுக்கு செல்ல இந்திய ராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.

English summary
UP Relief Commissioner has issued a notice to all District Magistrates of the state issuing a 'Disaster Alert'. Districts which lie on the Ganga riverbanks have been put on alert.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X