லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினமும் குளிக்க மறுக்கும் மனைவி.. அட்வைஸ் செய்தும் கேட்காததால் டென்சன்.. கணவர் செய்த வினோத சம்பவம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவி தினமும் குளிக்க மறுப்பு தெரிவிப்பதாக கூறி கணவர் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அலிகாரை அடுத்த குவார்ச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆணுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது.

அந்த பெண் தினந்தோறும் குளிப்பதில்லை என்பது கணவரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பல முறை அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் மனைவியை விவாகரத்து செய்ய கணவர் திட்டமிட்டார்.

பேரவலத்தின் பிடியில் உத்தரப்பிரதேசம்.. ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியது- 223 பேர் பலிபேரவலத்தின் பிடியில் உத்தரப்பிரதேசம்.. ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியது- 223 பேர் பலி

அலிகார்

அலிகார்

இதையடுத்து அந்த பெண் தனது திருமண பந்தத்தை காப்பாற்றிக் கொள்ள அலிகாரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார். இருவரையும் அழைத்து பேசிய அந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்கியது. மேலும் இது போன்ற சிறிய காரணங்களுக்கெல்லாம் விவாகரத்து பெறுவது சரியில்லை என அறிவுறுத்தினர்.

அறிவுரை

அறிவுரை

இதையடுத்து தம்பதிக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கிய அந்த பாதுகாப்பு மையம், தங்கள் பிள்ளைக்கு அறிவுரை வழங்குமாறும் அந்த நபரின் பெற்றோரிடம் தெரிவித்திருந்தனர். எனினும் விடாபிடியாக கணவர் விவாகரத்து எனும் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த விரும்பாமல் உள்ளார்.

சேர்ந்து வாழ விருப்பம்

சேர்ந்து வாழ விருப்பம்

அதே போல் மனைவியும் தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதிலேயே உறுதியாக உள்ளார். இதெல்லாம் சிறிய பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என வழக்கறிஞர்களும் அறிவுரை வழங்கியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. இதுகுறித்து பெண்கள் பாதுகாப்பு மையம் கூறுகையில் இந்த விவகாரத்தில் கணவருக்கு எத்தனை புத்திமதி சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் குழந்தையின் மனநிலை பாதிக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.

போலீஸார் மறுப்பு

போலீஸார் மறுப்பு

இதனால் இருவரையும் திருமணம் தொடர்பான முடிவுகளை எடுக்க செல்ல அனுமதி அளித்துள்ளோம். வன்முறைச் சட்டம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றம் என்ற பிரிவின கீழ் வராது என்பதால் மனைவியின் மனுவை முன்னெடுத்துச் செல்ல முடியாது என காவல் துறையினரும் தெரிவித்துவிட்டனர். எத்தனையோ விசித்திரமான வழக்குகளை கேட்டிருக்கிறோம். இது வித்தியாசத்திலும் வித்தியாசமானது என தெரிவித்தனர்.

English summary
Uttar Pradesh's Aligarh man demands divorce as his wife not take bath daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X