லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஃபீல் கானை உடனே விடுதலை செய்யுங்கள்.. என்எஸ்ஏவை நீக்குங்கள்.. அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு!

Google Oneindia Tamil News

லக்னோ: மருத்துவர் கஃபீல் கானை உடனே விடுதலை செய்ய வேண்டும், கஃபீல் கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட புகாரை நீக்க வேண்டும் என்று அலஹாபாத் ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருக்கும் பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை குறித்தும், இதில் அரசு செய்த முறைகேடு குறித்தும் வெளியே தெரியப்படுத்தயவர்தான் மருத்துவர் கஃபீல் கான்.மருத்துவர் கஃபீல் கான்தான் தனது சொந்த காசில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றினார்.

எல்லாம் திறந்தாச்சு.. ஆனா அரைகுறையா இருக்கே.. மிச்சமிருக்கிற 5 மாசத்துக்கு வழி? குழப்பத்தில் மக்கள்!எல்லாம் திறந்தாச்சு.. ஆனா அரைகுறையா இருக்கே.. மிச்சமிருக்கிற 5 மாசத்துக்கு வழி? குழப்பத்தில் மக்கள்!

கைது ஏன்

கைது ஏன்

அப்போது அரசுக்கு எதிராக இவர் கடுமையான புகார்களை வைத்து இருந்தார். இதனால் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் நடவடிக்கைக்கு இவர் உள்ளானார். அரசின் தவறை வெளியே கொண்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். பலமுறை அடுத்தடுத்து உத்தர பிரதேச அரசு மூலம் இவர் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ம் தேதி இவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தில் இவர் இந்திய இறையாண்மை குறித்தும், சிஏஏ குறித்தும் உரை நிகழ்த்தினார்.

சட்டம் பாய்ந்தது

சட்டம் பாய்ந்தது

இதன் காரணமாக இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி இதனால் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி இவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட புகார் நீட்டிக்கப்பட்டு, கைதும் நீட்டிக்கப்பட்டது. மேலும் 3 மாதம் இவர் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

விடுதலை செய்ய வேண்டும்

விடுதலை செய்ய வேண்டும்

இந்த நிலையில் இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் அலஹாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது. அதன்படி மருத்துவர் கஃபீல் கானை உடனே விடுதலை செய்ய வேண்டும், கஃபீல் கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட புகாரை நீக்க வேண்டும் என்று அலஹாபாத் ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தவறு இல்லை

தவறு இல்லை

இவருக்கு எதிராக என்எஸ்ஏ புகாரை நீட்டித்ததும் தவறு, இவர் பேசியதில் வெறுப்பை உமிழும் விஷயம் எதுவும் இல்லை. இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கு ஆதரவாகவே இவர் பெப்சி இருக்கிறார், இவர் பேசியதில் தவறு இல்லை என்று அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா சிறையில் கஃபில் கான் அடைக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் இதனால் விடுதலை செய்யப்பட இருக்கிறார்.

English summary
Allahabad high court orders to relase to Kafeel Khan revokes NSA against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X