லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாக்கதான் பாட்டி.. ஆனா தொழில்ல கில்லாடி! ரூ.6 லட்சம் மதிப்பிலான நகையை ஸ்கெட் போட்டு தூக்கிய மூதாட்டி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் ரூ.6.73 லட்சம் மதிப்பிலான நகையை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பாட்டியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேறெந்த கடைகளில் எல்லாம் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 50 ஆண்டு ரெக்கார்ட் காலி.. சாதனை படைத்த ஓரியன் விண்கலம்.. அசத்தும் நாசா! வியக்கும் உலக நாடுகள் 50 ஆண்டு ரெக்கார்ட் காலி.. சாதனை படைத்த ஓரியன் விண்கலம்.. அசத்தும் நாசா! வியக்கும் உலக நாடுகள்

ரூ.10 லட்சம்

ரூ.10 லட்சம்

உத்தரப் பிரதேசத்தின் கோரக்ப்பூர் நகரில் உள்ள பெச்சு லால் சரஃப் பிரைவேட் லிமிடெட் எனும் நகைக்கடைக்கு இந்த மூதாட்டி நகை வாங்க வந்திருக்கிறார். அப்போது கடையில் இருந்த இரண்டு பணியாளர்கள் என்ன விலையில் நகையை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர். பாட்டியும், ரூ.10 லட்சத்திற்குள் காட்டுங்கள் என்று கூறியுள்ளார். பணியாளர்களும் அதற்கேற்றார் போல நகைகளை அடுக்கியுள்ளனர். பாட்டியின் பக்கத்திலேயே மற்றொரு குடும்பம் நகைகளை எடுத்துக்கொண்டிருந்துள்ளது. இது பாட்டிக்கு வசதியாக போய்விட்டது. ஏனெனில் அந்த குடும்பத்தினர் பல மாடல்களில் நகைகளை கேட்டிருக்கின்றனர்.

கஸ்டமர்

கஸ்டமர்

பாட்டி அவர்கள் கேட்ட சில மாடல்களையும் வாங்கி பார்த்துள்ளார். பின்னர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு நகைப் பெட்டியின் மேலே இன்னொரு நகைப்பெட்டியை வைத்திருக்கிறார். அதிலிருந்த நகையை எடுத்து என்ன விலையென்று விசாரித்திருக்கிறார். அந்த பணிப்பெண்ணிடம் போட்டுக்காட்டுமாறு கேட்டிருக்கிறார். பணிப்பெண்ணும் நகை போட்டு காட்டியுள்ளார். இதெல்லாம் வெறும் 10 நிமிடங்களில் நடந்திருக்கிறது. பின்னர் யாரையோ கூப்பிடுவதைப்போல சைகை செய்திருக்கிறார். இரண்டு பணியாளர்களும் பக்கத்தில் இருந்த கஸ்டமரை கவனித்திருந்திருக்கின்றனர்.

பணம்

பணம்

அப்போது பாட்டி சைசாக ஒரு நகைப்பெட்டியை எடுத்து புடைவையில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர் புடவையை சரி செய்வது போல பெட்டியை மேலும் மறைவாக வைத்திருக்கிறார். எல்லாம் சரியான பின்னர் பக்கத்தில் இருந்த நகை எவ்வளவு? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் விலையை சொன்னதும் பணத்தை எடுத்து வருகிறேன் என மெதுவாக எழுந்து வெளியே சென்றுள்ளார். சென்றவர் திரும்பி வரவேயில்லை. பணியாளர்களும் மீதமிருந்த நகையை எடுத்து உள்ளே வைத்திருக்கின்றனர்.

புகார்

புகார்

ஆனால் அன்றிரவு கணக்கு பார்க்கும்போதுதான் ரூ.6.7 லட்சம் மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே மீண்டும் மீண்டும் நகைகளை சரிபார்த்துள்ளனர். எப்படி பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நகை மட்டும் மிஸ்ஸிஙக் ஆகியிருக்கிறது. இதுகுறித்து பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். கடைசியாக கடையின் சிசிடிவியை பரிசோதனை செய்துள்ளனர். அதில், பாட்டி நகையை களவாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

English summary
A 60-year-old woman stole jewelery worth Rs 6.73 lakh in Gorakhpur area of ​​Uttar Pradesh. Currently, the police are actively searching for Patty as the related video footage is spreading rapidly on social media. The police are also investigating whether similar thefts have taken place in other shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X