லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி ராமர் கோவில்.. எதிர்பார்த்ததை விட வேற லெவலில் இருக்கும்.. விவரிக்கும் கட்டடக் கலைஞர்கள்!

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட பிளானை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு, அளவிலும் வடிவத்திலும் அதிகமாக இருக்கும் என கட்டடக் கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு வழியாக கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த கட்டடம் எப்படி கட்டப்படும் என்பது குறித்து கட்டடக் கலைஞர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி இது கட்டுமான நகர கட்டடக் கலை பாணியில் கட்டப்படவுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 5 குவி மாடங்கள் அமைக்கப்படும்.

கோவை மாணவியின் மழைப் பொழிவை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு மோடி பாராட்டு கோவை மாணவியின் மழைப் பொழிவை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு மோடி பாராட்டு

கருவறை

கருவறை

இந்த கோயில் பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் முடிவடையும். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர் கோயிலின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. முன்பு டிசைன் செய்ததை விட இரட்டிப்பு மடங்கு இந்த முறை அளவு அதிகமாவே இருக்கும். கருவறைக்கு மேல் ஒரு டவர் இருக்கும்.

மறைந்த தலைவர்

மறைந்த தலைவர்

முன்பு டிசைன் செய்யப்பட்ட உயரத்தை விட கோயிலின் உயரம் தற்போது அதிகமாகவே இருக்கும். 77 வயதாகும் சோம்புரா, கோயில் கட்டுமான கலைஞர்கள் குடும்பத்தை சேர்ந்தவரான இவர் 200-க்கும் மேற்பட்ட டிசைன்களை உருவாக்கினார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே ராமர் கோயில் கட்டுவதற்கான டிசைன் செய்ய கேட்டுக் கொண்ட மறைந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

சோம்புராவும் அவரது மகன் ஆஷிஷும் கோயில் கட்டும் பிளானை அறக்கட்டளையில் சமர்ப்பித்து அது ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோயில் கட்டுமானத்தை ஆஷிஷ் பார்த்துக் கொள்வார். இவர் எத்தனையோ கோயில்களை கட்டியிருந்தாலும் அயோத்தி ராமர் கோயில் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தது என்கிறார்.

கோயில் கட்டுமானம்

கோயில் கட்டுமானம்

தனது தாத்தா பிரபாசங்கர் சோம்புராவுக்கு எப்படி சோம்நாத் கோயில் சிறப்பானதோ அது போல் தனக்கு ராமர் கோயில் என்றார். இந்த கோயில் வட இந்திய கட்டுமான முறையிலும் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்கள். கோயில் வடிவமைப்பிற்கு ஒரு நல்ல உதாரணமாக திகழும்படி இந்த கோயில் கட்டப்படும் என ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.

English summary
Architects says that Ram temple will be constructed within 3 years which will be very grand than earlier it had.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X