லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா- பாதுகாப்பு பணியில் இருந்த 15 போலீசாருக்கும் பாதிப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பூசாரி மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 15 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அங்கு ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

Ayodhya priest, 15 policemen test Positive for Coronavirus

இந்த நிலத்தில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்க உள்ளார்.

ராமர் கோவில் கட்டுமான அடிக்கல் நாட்டு விழா மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 5-ந் தேதி நாடு முழுவதும் கோவில்களில், மடங்களில் பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு பிரம்மாண்ட சிலைகள் ஆர்டர் வரலையே - கவலையில் சிலை உற்பத்தியாளர்கள் விநாயகர் சதுர்த்திக்கு பிரம்மாண்ட சிலைகள் ஆர்டர் வரலையே - கவலையில் சிலை உற்பத்தியாளர்கள்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த வாரம் அயோத்திக்கு சென்று அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர்கள் உட்பட மொத்தம் 200 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    Ayodhya Ram Temple-ல் 2000 அடியில் Time Capsule | Oneindia Tamil

    இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பூசாரி மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 15 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 16 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    A priest and 15 policemen on duty at the Ram temple site in Ayodhya have tested positive for coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X