லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Babri Masjid demolition case verdict Live Updates: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Google Oneindia Tamil News

லக்னோ: 1992 டிசம்பர் 6-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பளித்துள்ளார்.

Newest First Oldest First
5:07 PM, 30 Sep

நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா?- கமல்ஹாசன்
4:19 PM, 30 Sep

இந்திய நீதித்துறை வரலாற்றில் கறுப்பு நாள்: ஓவைஸி
4:19 PM, 30 Sep

நடுநிலையோடு பாபர் மசூதி பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்: வைகோ
2:56 PM, 30 Sep

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
2:32 PM, 30 Sep

தீர்ப்பு என்பதைவிட தீர்மானிப்பு என்பதேசரி- தொல். திருமாவளவன் எம்.பி
2:17 PM, 30 Sep

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை.
2:16 PM, 30 Sep

அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ நிரூபிக்கவில்லை
2:16 PM, 30 Sep

சிபிஐ வழங்கிய வீடியோ ஆதாரங்களில் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.
2:16 PM, 30 Sep

சிபிஐ வழங்கிய ஆதாரங்களில் இருந்த ஒலி,ஒளிப்பதிவுகள் தெளிவாக இல்லை
2:16 PM, 30 Sep

பாபர் மசூதி இடிப்பை குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள் தூண்டினார்கள் என்பதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை
2:16 PM, 30 Sep

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயற்சி செய்தார்கள்
2:16 PM, 30 Sep

பாபர் மசூதி இடித்தவர்கள் சமூக விரோதிகள்
1:25 PM, 30 Sep

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: அத்வானி
1:18 PM, 30 Sep

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது: ராம்விலாஸ் வேதாந்தி
1:17 PM, 30 Sep

நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்த வீடியோ பொய்யானது- பாபர் மசூதி இடிப்பு படங்களின் நெகட்டிவ்களை சிபிஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை- நீதிபதி எஸ்.கே. யாதவ்
1:13 PM, 30 Sep

தாமதமானாலும் நீதி வென்றது- ராஜ்நாத்சிங்
1:02 PM, 30 Sep

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது- முரளி மனோகர் ஜோஷி
12:56 PM, 30 Sep

லக்னோ நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் கருத்து
12:51 PM, 30 Sep

லக்னோ நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் அத்வானியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார்
12:36 PM, 30 Sep

பாபர் மசூதியை இடிக்க முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டப்படவில்லை- நீதிபதி எஸ்.கே.யாதவ். பாபர் மசூதியை இடிக்க முயன்ற கரசேவகர்களை குற்றம்சாட்டப்பட்டோர் தடுத்தனர்- நீதிபதி எஸ்.கே. யாதவ்.
12:36 PM, 30 Sep

குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பு
12:31 PM, 30 Sep

குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கும் எதிராக வலுவான ஆதாரம் இல்லை- நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ்
12:18 PM, 30 Sep

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், நிருத்ய கோபால் தாஸ் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்
12:01 PM, 30 Sep

நீதிமன்ற அறை எண் 18-ல் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில் ஐந்து ஐந்து பேராக அழைக்கப்பட்டு தீர்ப்பு தெரிவிக்கப்படும்.
12:01 PM, 30 Sep

நீதிமன்ற அறை எண் 18-ல் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில் ஐந்து ஐந்து பேராக அழைக்கப்பட்டு தீர்ப்பு தெரிவிக்கப்படும்.
11:58 AM, 30 Sep

குற்றம்சாட்டப்பட்டோருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் ஜாமீன் மனுக்களை உடனே தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் ஆயத்தம்
11:54 AM, 30 Sep

2,000 பக்க தீர்ப்பை வாசித்து வருகிறார் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ்
11:43 AM, 30 Sep

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது
11:32 AM, 30 Sep

லக்னோ நீதிமன்ற பகுதியில் இந்துத்துவா அமைப்பு ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்
11:20 AM, 30 Sep

குற்றம்சாட்டப்பட்ட 26 பேர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்
READ MORE

Babri Masjid demolition case verdict Live Updates
English summary
Babri Masjid demolition case verdict Live Updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X