லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் கோவில் கட்ட 25,000 பேர் தேவை.. விளம்பரம் கொடுத்தது யாருன்னு பாருங்க.. அதிர்ச்சியில் பாஜக!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராமர் கோவிலுக்காக அதிர்ச்சி விளம்பரம் கொடுத்த பஜ்ரங் தல்- வீடியோ

    லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அயோத்தியில் உள்ள ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. இதில் என்ன மாதிரியான தீர்ப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் அயோத்தியை வைத்து பஜ்ரங் தல் புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது பாஜகவிற்கு கோபத்தை உண்டாக்கி இருப்பதுதான் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

    யார் இவர்கள்

    யார் இவர்கள்

    ஆர்எஸ்எஸ் குடும்பத்தை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞரணி பிரிவுதான் பஜ்ரங் தல். முழுக்க முழுக்க இந்துத்துவா கொள்கை கொண்ட இளைஞர்களை மட்டும் நம்பி இந்த இயக்கம் இயங்கி வருகிறது . உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இவர்கள் வலுவாக இருக்கிறார்கள்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்போதே இதற்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டதாக கூறியுள்ளனர். கிராமம் கிராமமாக சென்று இதுகுறித்து பிரச்சாரம் செய்து கோவில் கட்டுவதற்கு உதவும் வகையில் இளைஞர்களை பணிக்கு அமர்த்த உள்ளனர்.

    மேலிட உத்தரவு

    மேலிட உத்தரவு

    இதில் பஜ்ரங் தல் அமைப்பினர் எடுத்திருக்கும் முடிவுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். எங்களுக்கு மேலிட உத்தரவுதான் முக்கியம், சில இந்து குருக்களின் உத்தரவிற்காக காத்து இருக்கிறோம், அவர்கள் அனுமதி அளித்ததும் கோவில் கட்டும் பணியை செய்வோம் என்று கூறுகிறார்கள்.

    பாஜக அதிர்ச்சி

    பாஜக அதிர்ச்சி

    பஜ்ரங் தல் இந்த முடிவில் இருப்பது பாஜகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்போதெல்லாம் நிறைய பேர் இப்படி உருவாகிவிட்டார்கள் என்று பாஜக பஜ்ரங் தல் முடிவை கிண்டல் செய்துள்ளது. மேலும் பாஜக இதில் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது, அது முடியும் வரை மற்றவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    English summary
    Bajrang Dal plans to recruit 25,000 volunteers to built Ram temple in Ayodhya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X