லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்தலாக் பற்றி விழிப்புணர்வு.. உ.பியில் இஸ்லாமிய பெண்களை வைத்து பிரச்சாரம் செய்யும் பாஜக!

முத்தலாக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜக கட்சி உருவாக்க உள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: முத்தலாக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜக கட்சி உருவாக்க உள்ளது.

பாஜக கட்சி உத்தர பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் நோக்குடன் பணியாற்றி வருகிறது. அதன் ஒருபடியாக உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்களை வைத்து ''இளம் தலாக் தலைவர்கள்'' என்ற குழுவை உருவாக்க உள்ளது.

இதில் இஸ்லாமிய 100 பெண்கள் இருப்பார்கள். இவர்கள் அந்த மாநிலம் முழுக்க இஸ்லாமியர்களிடம் முத்தலாக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள்.

2019 தேர்தல்

2019 தேர்தல்

2019 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பிரச்சாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது. 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இஸ்லாமிய ஆண்களின் வாக்குகளை விட இஸ்லாமிய பெண்களின் வாக்குகளையே அதிகம் பெற்றது. இதன் காரணமாக இந்த தேர்தலிலும் அதேபோல் இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை அதிகம் குறிவைத்துள்ளது.

100 பேர்

100 பேர்

பாஜகவின் மைனாரிட்டி மேம்பட்டு குழுவின் தலைவரான நசியா அலாம் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார்.
அதன் அடிப்படையில் பாஜக உத்தர பிரதேசத்தில் 93 நிர்வாக மாவட்டங்களாக பிரித்துள்ளது. அனைத்து நிர்வாக மாவட்டங்களில் இருந்து ஒரு பெண்ணும், 6 பிராந்தியங்களில் இருந்து ஒரு பெண்ணும் என்று மொத்தம் 100 பெண்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட உள்ளனர்.

யார் இவர்கள்

யார் இவர்கள்

அதிகம் படித்த இஸ்லாமிய பெண்களை இந்த அணியில் சேர்க்க இருக்கிறார்கள். இவர்கள்தான் எல்லோரிடமும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனர். இஸ்லாமிய சட்டம் குறித்து விவரம் தெரிந்தவர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இந்த டிசம்பருக்குள் தங்கள் பணியை முடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அறிக்கை செய்வார்கள்

அறிக்கை செய்வார்கள்

இதை வைத்து பெரிய அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.அரசியல் ரீதியாக இதை பயன்படுத்த கூடாது என்று விமர்சனம் வைக்கப்பட்டாலும், அரசியலில் பாஜகவிற்கு இது பெரிய பலனை அளிக்கும் என்றுதான் கூறுகிறார்கள்.அதேபோல் இஸ்லாமிய பெண்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பு குறித்தும், தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்தும் இதில் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
To make Muslim women understand and make them aware about the menace of tripple talaq, Bharatiya Janata Party (BJP) in Uttar Pradesh plans to appoint around 100 women as ‘teen talaq pramukhs’. They will ensure rehabilitation of the victims and their children. The party is also planning to do a survey in the month of December to know that how many triple talaq victims are in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X