லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்.. உ.பி., உத்தரகாண்ட் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

உபியின் ராஜ்ய சபா வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியிட்டது பாஜக

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8 வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது பாஜக.. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது.

 BJP releases names of eight candidates from UP and one from Uttarakhand for upcoming RS elections

உத்திர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் அருண் சிங், நீரஜ் சேகர், ஹர்தீப் சிங் புரி ஆகியோரும் சமாஜ்வாதி கட்சியின் டாக்டர் சந்திரபால் சிங் யாதவ், ஜாவெத் அலி கான், ராம்கோபால் யாதவ், ராம பிரகாஷ் வர்மா ஆகியோரும் ஓய்வு பெறுகின்றனர்.

அவர்களை தவிர, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜாராம், வீர் சிங், காங்கிரஸ் சார்பில் பன்னா லால் பூனியாவும் ஓய்வு பெறுகின்றனர். உத்திரகாண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ் பாப்பர் ஆகியோரின் பதவிக்காலமும் தற்போது நிறைவடைவதை ஒட்டி, இந்த இடங்களுக்காக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!

இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எளிதாக 8 இடங்கள் கிடைக்கும் என்றுகூட ஏற்கனவே செய்திகள் வந்தன.. இந்நிலையில், 8 வேட்பாளர்கள் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.. அதேபோல, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவரையும் அறிவித்துள்ளது.. பாஜகவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் நீரஜ் சேகர் ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது பதவியில் உள்ளவர்கள் ஆவர்.. அதேபோல, கீதா சக்யா, ஹரித்வார் துபே, பிரிஜ்லால், பி.எல் வர்மா, சீமா திவேதி ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கு பெரும்பான்மை இருப்பதால், பாஜகவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவைக்கு 8 வேட்பாளர்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. அதேபோலவே, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேஷ் பன்சலும் அமோக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
BJP releases names of eight candidates from UP and one from Uttarakhand for upcoming RS elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X