லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயல்வெளியில் பற்றிய தீயை அணைக்க.. கைபம்பில் தண்ணீர் அடித்துக் கொடுத்து உதவிய ஸ்மிருதி இரானி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வயல்வெளியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொடுத்து உதவினார்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவசர் ராகுல் காந்தியை எதிர்த்து இரண்டாவது முறையாக பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

BJPs Candidate Smriti Irani Joins Fire-Fighting Efforts in Amethi Village

இவர் கடந்த முறை தோற்றுவிட்ட நிலையில், இந்த முறையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் கிராமம், கிராமாக சென்று தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவை சேர்ந்த இரண்டு பேரிடம் விசாரணை.. என்ஐஏ கிடுக்குப்பிடி!இலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவை சேர்ந்த இரண்டு பேரிடம் விசாரணை.. என்ஐஏ கிடுக்குப்பிடி!

அப்படித்தான் ஸ்மிருதி இரானி, புராப் துவாரா என்ற கிராமத்துக்கு இன்று சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வயல்வெளியில் வாக்கு சேகரிக் சென்ற போது அங்கு திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னுடன் வந்த இளைஞர்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். அதற்காக அருகில் இருந்த கைபம்பில் தானே தண்ணீர் அடித்து கொடுத்து தீயை அணைக்க உதவினார்.

இதனிடையே தகவல் அறிந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கெண்டுவந்தனர். வயல்கள் தீப்பிடித்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த ஸ்மிருதி இரானி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, நான் அமேதி எத்தனை முறை வந்தேன் என்பதை பிரியங்கா காந்தி எண்ணியிருப்பதை கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியான விஷயம் தான். 15 வருடங்கள் இந்த ஊர் எம்பி (ராகுல்) காணாமல் போனதை சொல்ல முடியாது என்பதால் அவர் நான் வந்துபோனதை எண்ணியிருக்கக்கூடும் என்றார்.

English summary
lok sabha elections 2019: BJP's Amethi Candidate Smriti Irani Joins Fire-Fighting Efforts in Village
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X