லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம குடும்பத்தையும் பிரிப்பாரோ.. மோடியை கண்டு பாஜக பெண் பிரமுகர்கள் பீதியாம்.. மாயாவதி ஓவர் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Mayawati about Modi: பிரதமர் மோடி குறித்து மாயாவதி சர்ச்சை பேச்சு- வீடியோ

    லக்னோ: பிரதமர் மோடி தங்களது குடும்பத்தையும் பிரித்துவிடுவாரோ என பாஜக பெண் பிரமுகர்கள் பீதியில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

    லோக்சபா தேர்தல் களத்தில் வரமுறையின்றி தனிமனித தாக்குதல்கள் உச்சத்தில் உள்ளன. இன்னும் ஒரு கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    இழிவான சொற்கள்

    இழிவான சொற்கள்

    ஆனால் தலைவர்கள் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச முடியுமோ எந்த அளவுக்கு தனிநபர்களை இழித்தும் பழித்தும் பேச முடியுமோ அந்த அளவுக்கு இறங்கிவிட்டனர். நாலாந்தர பேச்சாளர்களை தோற்கடிக்கும் வகையில் கட்சியின் தலைவர்களே பேசி வருவது பெரும் அதிர்ச்சியும் சர்ச்சையுமாகி உள்ளது.

    மரணத்தில் முடிந்த அதிவேக பயணம்- உடல் கருகி பலியான இளைஞர்கள் - தூத்துக்குடியில் சோகம்மரணத்தில் முடிந்த அதிவேக பயணம்- உடல் கருகி பலியான இளைஞர்கள் - தூத்துக்குடியில் சோகம்

    மாயாவதியின் ஓவர் பேச்சு

    மாயாவதியின் ஓவர் பேச்சு

    பிரதமர் மோடி குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியதாவது: பாஜகவில் உள்ள திருமணமான பெண்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

    மோடியால் குடும்பங்கள் பிரியுமாம்

    மோடியால் குடும்பங்கள் பிரியுமாம்

    தங்களது கணவன்மார்கள் பிரதமர் மோடியை சந்தித்துவிடுவார்களோ என அச்சப்படுகின்றனர். அப்படி ஒருவேளை பிரதமர் மோடியை சந்தித்துவிட்டால் அவரைப் போல மனைவியை பிரித்துவிடுவாரோ என்பதுதான் அந்த அச்சம்.

    மோடிக்கா உங்கள் வாக்கு?

    மோடிக்கா உங்கள் வாக்கு?

    பெண் வாக்காளர்கள் இம்முறை மோடிக்கு வாக்களிக்கப் போவது இல்லை. கட்டிய மனைவியையே கைவிட்டவர்தான் பிரதமர் மோடி. இப்படியான ஒரு நபருக்கு ஒட்டுமொத்த பெண் வாக்காளர்களும் வாக்களிக்கவே கூடாது. அதுதான் மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செலுத்தும் மரியாதை. இவ்வாறு மாயாவதி பேசினார்.

    அருண்ஜேட்லி கடும்

    அருண்ஜேட்லி கடும்

    அவரது இப்பேச்சுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கடுமையாக சாடியுள்ளார். மாயாவதி போன்றவர்கள் பொதுவாழ்க்கைக்கே தகுதி அற்றவர்கள் என தமது ட்விட்டர் பக்கத்தில் சீறியுள்ளார் அருண் ஜேட்லி.

    English summary
    BSP chief Mayawati claimed that women legislators in the BJP fear that if PM Modi meets their husbands, they will leave their wives as PM Modi did.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X