லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த பெண்ணை கூட்டிட்டு வாங்க.. அப்போதுதான் நம்புவோம்.. சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் நெத்தியடி

பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Woman disappeared after posting a video against BJP ex-MP in UP

    லக்னோ: பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கி உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் சுவாமி சுக்தேவானந்தா கல்லூரியில் படித்து வரும் அந்த பெண் சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்து முக்கியமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். பேஸ்புக் முழுக்க இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையானது.

    குழந்தை கடத்தல் வதந்தி.. மனநிலை பாதித்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. வன்முறை கும்பல் வெறியாட்டம்குழந்தை கடத்தல் வதந்தி.. மனநிலை பாதித்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. வன்முறை கும்பல் வெறியாட்டம்

    என்ன வீடியோ

    என்ன வீடியோ

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனந்த் சமாஜ் அமைப்பை சேர்ந்த பெரிய தலைவர் ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அவர் தற்போது என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். யோகி ஜி, மோடி ஜி பிளீஸ் உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள். நான் இனியும் உயிரோடு இருப்பேனா என்று தெரியாது, என்று குறிப்பிட்டார்.

    புகார் என்ன

    புகார் என்ன

    ஆனால் அந்த வீடியோவில் சின்மயானந்தா பெயரை அந்த பெண் நேரடியாக சொல்லவில்லை. இந்த நிலையில் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் காணாமல் போனார். இது தொடர்பாக போலீசில் அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆனால் 6 நாட்கள் ஆகியும் அந்த பெண் எங்கே போனார் என்ற விவரம் தெரியவில்லை.

    எங்கே

    எங்கே

    இந்த நிலையில் இந்த பெண்ணை கடந்த சில தினங்களாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து அந்த பெண் கொடுத்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.

    புகார்

    புகார்

    இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். பானுமதி, எஸ். போபன்னா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த பெண் எங்கே என்று போலீசாரிடம் கேட்டனர். இந்த நிலையில் அந்த பெண் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தற்போது போலீசாருடன் இருக்கிறார் என்று கூறினார்கள்.

    மைனர் ஏன்

    மைனர் ஏன்

    அதே சமயம் அந்த பெண் மைனர். அதனால் கேமரா முன், எல்லோருக்கும் முன் அவரை கோர்ட்டுக்கு கொண்டு வர முடியாது என்று கூறினார்கள். அதிலும் இது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணை நாங்கள் பார்க்க வேண்டும். அவர் உங்களிடம்தான் இருக்கிறார் என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    எப்படி ரகசியம்

    எப்படி ரகசியம்

    அவர்கள் உங்கள் கஸ்டடியில் இருக்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால் அவரை இப்போது நீதிமன்றம் கொண்டு வாருங்கள். ரகசியமாக யாருமில்லாமல் நாங்கள் விசாரிக்கிறோம். அவரின் அடையாளம் வெளியிடப்படாமல் நாங்கள் அவரை விசாரிக்கிறோம் என்று குறிப்பிட்டனர்.

    2 மணி நேரம் எப்படி

    2 மணி நேரம் எப்படி

    இதையடுத்து இரண்டு மணி நேரத்தில் அந்த பெண்ணை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கு பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

    English summary
    Bring her to court, We will do a 'Confidential' interaction says SC to Rajasthan cops today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X