India
  • search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“முதல்ல உங்க வீடு ஒழுங்கா இருக்கானு பாருங்க”அப்பா செய்ததை மகன் செய்கிறார்! ராகுலுக்கு மாயாவதி பதிலடி

Google Oneindia Tamil News

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் அணுகியது எனவும், ஆனால் அவர் போராட விரும்பாமல் எங்களுக்கு பதில் சொல்லவில்லை என்று ராகுல் காந்தி நேற்று கூறிய நிலையில், ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற"தி தலித் ட்ரூத்" புத்தக வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது.

மதுரையில் 5 கி.மீ. நடைப்போட்டி.. வெற்றிபெற்ற 66 வயது முதியவர்! மதுரையில் 5 கி.மீ. நடைப்போட்டி.. வெற்றிபெற்ற 66 வயது முதியவர்!

குறிப்பாக உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பகுஜான் சமாஜ் கட்சியும், அக்கட்சியின் தலைவருமான மாயாவதியும் தான் காரணம் என்ற ரீதியில் ராகுல் காந்தி பேசியது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.

உத்திர பிரதேச தேர்தல்

உத்திர பிரதேச தேர்தல்

உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவை எதிர்த்து மாயாவதி போட்டியிடவில்லை. கூட்டணி அமைக்கலாம், முதல் அமைச்சர் வேட்பாளராக இருங்கள் என மாயாவதிக்கு நாங்கள் செய்தி அனுப்பினோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. இந்த முறை அவர் ஆதிதிராவிடர் மக்களுக்காக குரல் கொடுத்து போராடவில்லை. ஏனெனில் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளின் நடவடிக்கைக்கு பயந்தார். இப்படிதான் பாஜக அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. இதுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பாதித்தது என ராகுல் காந்தி பேசினார்.

 ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு காரணமும் உண்டு. உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 2017 தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணியின் தோல்விக்குப் பிறகு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். இது தேர்தலில் சமாஜ்வாதிக்கு ஓரளவு வெற்றி தான் என்றாலும், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 403 தொகுதிகளில் இரண்டு இடங்களை மட்டுமே வென்று 2.5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் காங்கிரஸ் பெற்றது.

மயாவதி பதிலடி

மயாவதி பதிலடி

ஆனால் காங்கிரசை விட பகுஜான் சமாஜ் கட்சியின் செயல்பாடுகள் சற்று சிறப்பாக இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றாலும், 13 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கு இடையே இருமுனைப் போட்டியாக மாறிய தேர்தலில், வேட்பாளர்களில் கிட்டத்தட்ட 72 சதவீதம் பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இதனால் தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால் ஓரளவு வென்றிருக்க முடியும் என ராகுல் பேசியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் யோசிக்க வேண்டும்

காங்கிரஸ் யோசிக்க வேண்டும்

"தனது சொந்த வீட்டை ஒழுங்காக அமைக்க முடியாத ராகுல் காந்தி, பாகுஜன் சமாஜ் கட்சி பற்றி பேசுகிறார். இந்த அற்ப விஷயங்களைக் காட்டிலும், உ.பி. தேர்தல் தோல்வி குறித்து இப்போது கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பிஜேபியை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை, ஆனால் இந்த பாட்ஷாட்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் உபிக்கு எதுவும் செய்யவில்லை" என்று மாயவாதி காட்டமாகக் கூறியுள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டு

பொய்யான குற்றச்சாட்டு

மேலும் முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான மறைந்த ராஜீவ் காந்தி கூட பகுஜன் சமாஜ் கட்சியை அவதூறாகப் பேச முயன்றார். அவரது மகன் அவரைப் பின்பற்றி பாஜகவின் மத்திய அமைப்புகளுக்கு நான் பயப்படுகிறேன் என்று பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதில் துளியும் உண்மையின் சுவடு கூட இல்லை. பிஜேபிக்கு எதிரான போரில் காங்கிரஸ் மோசமாக செயல்பட்டுள்ளது. பாஜகவை வீழ்த்துவதில் அக்கட்சி தனது சொந்த சாதனையைப் பார்த்துவிட்டு பிஎஸ்பியைப் பற்றி பேச வேண்டும் எனவும் மாயாவதி ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

English summary
While Rahul Gandhi said yesterday that the Congress had approached to form an alliance with Mayawati in Uttar Pradesh but he did not want to fight, BSP leader Mayawati has retaliated harshly against Rahul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X