லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது இவரும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் தான் நாட்டின் ஆட்சியாளர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கு மாநிலம் ஆகும். இங்கு 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இந்த மாநிலத்தில் போட்டியிடும் ஒருவர் தான் இதுவரை பெரும்பாலும் பிரதமராகி வருகிறார்கள்.

ஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல் ஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்

பகுஜன்-சமாஜ்வாதி போட்டி

பகுஜன்-சமாஜ்வாதி போட்டி

இந்நிலையில் பரம வைரிகளாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இந்த முறை இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்துள்ளன. இதன்படி மாயாவதியின் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், அகிலேஷின் சமாஜ்வாதி 38 தொகுதியிலும் போட்டியிட்டுள்ளன.

சிஓட்டர் கணிப்பு

சிஓட்டர் கணிப்பு

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றும் என்றும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி கூட்டணி 40 இடங்களை பிடிக்கும் என்றும் சி ஓட்டர் ரிபப்ளிக் கணிப்புகள் சொல்லியிருக்கின்றன.இதேபோல் ஜன் கி பாத் கணிப்பின் படி 46 முதல் 57 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி 15 முதல் 29 இடங்களையே கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயவதி கூட்டணி

மாயவதி கூட்டணி

ஏபிபி நியூஸ் வெளியிட்ட கணிப்பில் பாஜக 22 இடங்களை மட்டுமே பெறும் என்றும் 56 தொகுதிகளில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி பெறும் என்றும் தெரிவித்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளால் உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளதோடு அதிர்ச்சியும் அடைந்துள்ளன.

மகா கூட்டணி ஆலோசனை

மகா கூட்டணி ஆலோசனை

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மாயாவதியில் இல்லத்தில் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தேர்தல் கூட்டணி, அடுத்தகட்ட நடவடிக்கை, உள்ளிட்டவைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்எல்டி கட்சி தலைவர்களும் இருந்தனர்.

English summary
exit poll effect: BSP supremo Mayawati meets Samajwadi Party leader Akhilesh, discuss exit polls projections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X