லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட போராட்டம்: உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு- உ.பி.யில் மட்டும் 6 பேர் பலி!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன.. டெல்லி, மங்களூர், லக்னோ என பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.

CAA Protest: 6 dead in Violence across UP

மங்களூருவில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். லக்னோவில் இப்போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் என பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியிலும் லக்னோவிலும் போராட்டங்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

CAA Protest: 6 dead in Violence across UP

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது போராட்டங்களின் போது பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் கூறியதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மொத்தம் 9 பேர் பலி

உ.பியின் பிஜ்னோரில் 2 பேர், சம்பால், பைரோசாபாத், மீரட், கான்பூரில் தலா ஒருவர் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 நாட்களில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

English summary
According to the police sources, At least Six People dead in violence across UP during the CAA Protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X