லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பற்றி எரிந்தது லக்னோ- 3 பேருந்துகள், 10 கார்கள், 4 மீடியா வேன்கள், 20 இருசக்கர வாகனங்கள் தீக்கிரை

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவா... வேணாம்! எச்சரிக்கும் நாடுகள்

    லக்னோ: உத்தரப்பிரதேசம் முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் படுதீவிரமடைந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் 50-க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் அந்நகரமே பற்றி எரிந்தது.

    குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கில் பற்றிய தீ தேசம் முழுவதும் பரவிவிட்டது. பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    பல மாநிலங்கள் போராட்டங்களை ஒடுக்க தடை உத்தரவை அமல்படுத்திய போதும் அனைத்து இடங்களிலும் தடைகளை மீறி லட்சக்கணக்கானோர் போராடி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்திலும் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    டெல்லியில் பயங்கர டிராபிக் ஜாம் .. ஸ்தம்பித்தது போக்குவரத்து.. பல மெட்ரோ நிலையங்கள் மூடல் டெல்லியில் பயங்கர டிராபிக் ஜாம் .. ஸ்தம்பித்தது போக்குவரத்து.. பல மெட்ரோ நிலையங்கள் மூடல்

    வாகனங்கள் எரிப்பு

    ஆனால் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியை போல உக்கிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லக்னோவின் ஹசன்கஞ்ச் பகுதியில் போராட்டத்தின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    50 வாகனங்கள் தீக்கிரை

    50 வாகனங்கள் தீக்கிரை

    தலைநகர் லக்னோவில் 3 பேருந்துகள், 10 கார்கள், 4 மீடியா வாகனங்கள் மற்றும் 20 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் லக்னோ நகரமே பற்றி எரிந்தது.

    பேருந்து எரிப்பு

    சம்பால் மாவட்டத்தில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பால் மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

    கோரக்பூரில் சமாஜ்வாடி போராட்டம்

    கோரக்பூரில் சமாஜ்வாடி போராட்டம்

    கோரக்பூரில் தடையை மீறி சமாஜ்வாடி கட்சியினர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    சட்டசபைக்கு வெளியே போராட்டம்

    சட்டசபைக்கு வெளியே போராட்டம்

    லக்னோவில் சட்டசபைக்கு வெளியேயும் சமாஜ்வாடி கட்சியினர் பெரும் எண்ணிக்கையில் கூடி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து லக்னோ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வதந்திகளை நம்ப வேண்டாம்

    வதந்திகளை நம்ப வேண்டாம்

    இப்போராட்டங்கள் குறித்து உத்தப்பிரதேச டிஜிபி ஓபி சிங் கூறுகையில் அலிகார், வாரணாசி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

    வாரணாசியில் தடியடி

    வாரணாசியில் தடியடி

    வாரணாசியிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தடையை மீறி நடைபெற்றன. இப்போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

    English summary
    Thousands of people were protesting on the streets when four buses and police vehicles were vandalised in UP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X