லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஏஏ எதிர்ப்பு.. உ.பியில் வைத்து கைது செய்யப்பட்ட கண்ணன் கோபிநாத்.. பின்னணியில் என்ன நடந்தது?

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக உத்தர பிரதேசம் சென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அம்மாநில போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக உத்தர பிரதேசம் சென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அம்மாநில போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் போலீசால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது குறித்து அவர் டிவிட்டரில் ஆதாரங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது.

இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை நாடு முழுக்க பல்வேறு இடங்களில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் முன்னின்று நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக இவர் மிக முக்கியமான முகமாக உருவெடுத்துள்ளார்.

 அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு

யார் இவர்

யார் இவர்

மத்திய அரசின் ஐஏஎஸ் பிரிவில் இருந்த இவர் டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது எதிராக குரல் கொடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதவியில் இருந்து விலகினார். அப்போதில் இருந்து போராட்டங்களை செய்வது, மக்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

எங்கு சென்றார்

இந்த நிலையில்தான் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்காக உத்தர பிரதேசம் சென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அம்மாநில போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ள கண்ணன் கோபிநாத் சென்றார். ஆனால் அவரை ஆக்ராவில் வைத்து போலீஸ் அப்புறப்படுத்தி உள்ளனர்.

என்ன டிவிட்

தான் போலீசால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது குறித்து அவர் டிவிட்டரில் ஆதாரங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். என்னை ஆக்ராவில் வைத்து போலீஸ் அப்புறப்படுத்தியது. ஆனால் அவர்களிடம் அலிகார்க்கில் வைத்து அப்புறப்படுத்த மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்கே சென்றனர்

அவரை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து ஹோட்டல் ஒன்றை நோக்கி சென்றுள்ளனர். ஆனால் அவரை அழைத்துக் கொண்டு, அவர்கள் போலீஸ் நிலையம் எங்கேயும் செல்லவில்லை. கடைசியாக அவரை தாபா ஒன்றை நோக்கி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு உணவு சாப்பிட்டு இருக்கிறார்கள்.

சாப்பாடு

போலீஸ் தன்னிடம் மரியாதையாக நடக்கிறது. ஆனால் தன்னை அவர்கள் எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கண்ணன் கோபிநாத் தெரிவித்துள்ளார். அலிகார் பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று இவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் அதை கண்ணன் கோபிநாத், நான் கண்டிப்பாக அலிகார் செல்வேன் என்று டிவிட் செய்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் கடந்த டிசம்பர் 13ம் தேதி மும்பையில் கண்ணன் கோபிநாத் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Former IAS officer Kannan Gopianatha arrested for while he is going to AMU in UP for CAA protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X