• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முஸ்லிம்களை குறிவைத்து ஒவ்வொரு தாக்குதலையும் நிகழ்த்தியது உ..பி. போலீஸ்? பகீர் வீடியோக்கள்

|

லக்னோ: உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களுக்குப் பின்னர் உத்தரபிரதேச காவல்துறை முஸ்லிம்களை குறிவைத்து தாக்கியதாக மனித உரிமை ஆர்வலர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

ஜான் தயால், கவிதா கிருஷ்ணன் மற்றும் ஹர்ஷ் மந்தர் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சிவிலியன் உண்மை கண்டறியும் குழுவினர், போராட்டத்தின் போது வன்முறை மாநில காவல்துறையினரால் தூண்டப்பட்டது என்பதற்கும், அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதற்கும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஜான் தயால், கவிதா கிருஷ்ணன் மற்றும் ஹர்ஷ் மந்தர் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மீதான போராட்டத்தின் போது உத்தரபிரதேச காவல்துறையினரால் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பபட்டதாக கூறி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை. அதேநேரம் இந்த வீடியோக்கள் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. கேரளா ஆளுநரை பேசவிடாமல் முற்றுகையிட்ட வரலாற்று ஆய்வாளர்கள்

வீடுகள் கொள்ளை

கவிதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டில், உத்தரப் பிரதேச. காவல்துறை, விரைவு அதிரடிப்படை (RAF) மற்றும் உத்தரபிரதேச ஆயுதப்படையினர் (பிஏசி) சீருடையில் "கலகக்காரர்களாக" செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த பகுதியில் (முசாபர்நகர்) பல முஸ்லிம்களின் வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக கூறி வீடுகளின் வீடியோக்களை அவர் வெளியிட்டார், மேலும் உ.பி. காவல்துறை "அவர்களின் வீடுகளை குறிவைத்து குப்பைத்தொட்டியாக்கி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

வெளியேற்றப்படுவார்கள்

வெளியேற்றப்படுவார்கள்

கவிதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், முஸ்லீம் வீடுகளை தனிப்படுத்தி கடுமையாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். சேதப்படுத்தும் போது உத்தரப்பிரதேச போலீசார், "முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். தரையையும் சுவர்களையும் சேதப்படுத்தாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இவை அனைத்தும் ஒரு நாள் எங்களுக்கு சொந்தமானவை" என்று சொல்லியதாகவும் கவிதா கூறியிருக்கிறார்.

வாகனம் உடைப்பு

வாகனம் உடைப்பு

கவிதா கிருஷ்ணன் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில் ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் உடைந்த வாஷ்பேசின்கள் மற்றும் அழிக்கப்பட்ட ஸ்கூட்டரின் படங்களை காட்டுகிறார். அதை விவரிக்கும் கவிதா கிருஷ்ணன், ஒருவரை போலீசார் இழுத்துச் சென்று, கைது செய்ததாகவும், பின்னர் தன்னிடம் துப்பாக்கிகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும்படி அவரை கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இளம் பெண் படுகாயம்

ஒரு டீனேஜ் சிறுவனை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் மனித உரிமை ஆர்வலர் கவிதா குற்றம்சாட்டி உள்ளார். அத்துடன் தனது மாமாவைப் பாதுகாக்க முயன்றபோது ஒரு இளம்பெண்ணின் தலையில் கொடூரமாக காயம் ஏற்பட்டது என்றும் கவிதா தனது டுவிட்டில் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றையும்

எல்லாவற்றையும்

மனித உரிமை ஆர்வலர்கள் ஜான் தயால் மற்றும் கவிதா கிருஷ்ணன் மேலும் கூறுகையில், உ.பி. காவல்துறை, கொடி அணிவகுப்பை நடத்திய போது போலிக்காரணத்தை கூறி, பல முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளுக்குள் நுழைந்தபோது எதையும் எல்லாவற்றையும் உடைத்து என்று கூறியுள்ளார்கள்.. "ஒரு தட்டு அல்லது கோப்பை அல்லது அலமாரி என அதையும் விடாமல் முழுவதுமா அடித்து உடைத்துள்ளர்கள். இந்த படைகள் உள்ளே நுழைந்தபோது இரவில் மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்" என்று கவிதா கிருஷ்ணன் கூறினார்.

சிசிடிவி காட்சிகள்

1929 இல் முதன்முதலில் அமைக்கப்பட்ட ஒரு விடுதி கூர்மையான ஆயுதங்களால் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் சி.சி.டி.வி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் அவற்றின் பதிவுகள் போலீசாரால் பறித்து செல்லப்பட்டதாகவும் கவிதா கூறினார்.

மாணவர்கள் தப்பினர்

பேகம் நஷாபா வளாகத்தில் இயங்கும் ஷியா கல்வி நிறுவனங்களுக்கு புகுநத காவல்துறையினர் கதவுகளைத் திறந்து தாக்கியபோது பல மாணவர்கள் பள்ளியின் முதல்வரும் மறைந்திருந்து கொண்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அப்பாது பல பள்ளிகள் மற்றும் விடுதிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சதாத் விடுதி மற்றும் பள்ளியின் தளத்தில் இன்னும் இரத்தக் கறை இருந்ததாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வயதானவர்களிடம்

கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஹமீத் ஹசனை மேற்கோள் காட்டி ஜான் தயால் வெளியிட்டுள்ள பதிவில், கொடி அணிவகுப்பை போலீசார் அறிவித்தபோது, தெருவிளக்குகள் அணைக்கப்பட்டது . "காவல்துறையினர் 40 வாகனங்களில் வந்திருந்தனர். அதிக எண்ணிக்கையில் இருந்தனர், அவர்கள் ஹமீத் ஹசனின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு முஸ்லீம் கடைகளை அடித்து நொறுக்கினர். பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என வயதானவர்களிடம் சொன்னார்கள்" என்று ஜான் தயால் குற்றம் சாட்டினார்.

அனைத்தும் அழிப்பு

ஜான் தயால் வெளியிட்ட மற்றொரு பதிவில், உ.பி., முசாபர்நகர், ஜஸ்வந்த்புரியில் வசிக்கும் மொஹமட் இன்டெசரை பற்றி கூறியுள்ளார். இன்டெசர் ஒரு பெரிய விவசாயி, ஒரு சமூக சேவகர் மற்றும் ஒரு சமூகத் தலைவர். 40 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, அவரது இரண்டு கார்களைத் உடைத்து, அவர்களால் முடிந்த அனைத்தையும் அழித்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. இப்படி பல கதைகளை கிருஷ்ணன் மற்றும் தயால் இருவரும் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோக்கள் பதிவுகள் ஒவ்வொன்றும அதிர்ச்சிகரமாக உள்ளது. இது பற்றி உத்தரப்பிரதேச காவல்துறை விளக்கம் அளித்தால் மட்டுமே முழுமையாக தகவல் தெரியும். அவர்கள் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

 
 
 
English summary
human rights activists John Dayal, Kavita Krishnan and Harsh Mander, has claimed to have proof that violence during the agitation was incited by UP state police and that the Muslims in the area were tortured.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X