லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க உயர் சாதி தான் மாயாவதி புகார்.. இல்லை நான் பிற்படுத்தப்பட்டவன் தான் என கூறும் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்க உயர் சாதி தான் மோடி மீது மாயாவதி புகார்

    லக்னோ: உயர் சாதியில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் ஆதாயத்திற்காக தன்னை பின்தங்கிய சாதியில் பிறந்தவர் என கூறிக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் போன்று பிரதமர் மோடி பின்தங்கிய சாதியில் பிறந்தவர் அல்ல என்று கூறினார்.

    Can not pull me into caste politics..Modi responded to mayavati complaint

    உயர் சாதியில் பிறந்த மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அரசியல் ஆதாயத்திற்காக தனது சாதி சான்றிதழில் ஓபிசி என திருத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மோடி முன்பு உயர்சாதி பட்டியலில் தான் இருந்தார் என மாயாவதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    அரசியல் ஆதாயம் மற்றும் பிறபடுத்தப்பட்டோரின் வாக்குகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தான், பிரதமர் மோடி தனது சாதியை மாற்றிக் கொண்டுள்ளதாக கடுமையாக சாடினார் மாயாவதி.

    இனி ரசகுல்லாவில் கல்தான்.. மோடியின் பற்கள் உடையட்டும்.. கடும் கொந்தளிப்பில் மம்தா பானர்ஜி! இனி ரசகுல்லாவில் கல்தான்.. மோடியின் பற்கள் உடையட்டும்.. கடும் கொந்தளிப்பில் மம்தா பானர்ஜி!

    ஆனால் மாயாவதியின் மேற்கண்ட குற்றச்சாட்டை பிரதாம் மோடி உறுதிபட மறுத்துள்ளார். இது குறித்து தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், எனக்கு சாதி அரசியலில் நம்பிக்கை இல்லை. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் தான். ஆனால் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பாடுபடுகிறேன் என கூறினார்.

    மேலும் தன்னை சாதி அரசியலுக்குள் இழுக்க முடியாது என்று கூறிய மோடி, அம்பேத்கரை அவமானப்படுத்திய சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள மாயாவதி, எனக்கு எதிராக எந்த சூழ்ச்சி செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும் என்றார். பிரதமரின் சாதியை மையப்படுத்தி மாயாவதி கூறியுள்ள புகார், உத்ததிரப்பிரதேச தேர்தல் களத்தில் மையப் பொருளாகியுள்ளது.

    English summary
    Television actor Vivke Dahiya said that he too faced casting couch issue but ignored it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X