லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 மணி நேரம் சுடுகாட்டில் கிடந்த தலித் பெண்ணின் சடலம்.. எரிக்க விடாமல் தடுத்த சா"தீ" கொடுமை..!

தலித் பெண்ணின் சடலத்தை எரிக்க விடாமல் தடுத்த கொடுமை நடந்துள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: 6 மணி நேரமாக மயானத்தில் கிடந்தது பூஜாவின் சடலம்.. தலித் பெண்ணின் உடலை அந்த சுடுகாட்டில் எரிக்க கூடாது என்று உயர் வகுப்பினர் மல்லுக்கட்டி கொண்டு நின்றதால், இப்படி ஒரு கொடூர அவலம் ஏற்பட்டது!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது ககர்புரா என்ற கிராமம்.. இது ஆக்ராவிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.. இந்த கிராமத்தில் பல சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

குறிப்பாக, நாட் மற்றும் தாகூர் சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.. இதில் நாட் என்று சொல்லப்படுபவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.. தாகூர் என்று சொல்லப்படுபவர்கள் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி பூஜா என்ற பெண் இறந்துவிட்டார்.. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.. 26 வயதாகிறது.. கருப்பை தொற்று ஏற்பட்டு, அதனால் மரணமடைந்து விட்டார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அதற்கான ஏற்பாட்டினை பூஜாவின் கணவர் ராகுல் செய்ய ஆரம்பித்தார்.

மேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடிமேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடி

 பூஜா சடலம்

பூஜா சடலம்

உறவினர்களுடன் பூஜாவின் உடலை தகனம் செய்வதற்காக அந்த கிராமத்தில் உள்ள கிராம சபா தகன மைதானத்திற்கு கொண்டு சென்றனர்... ஆனால், தாகூர் சமூகத்தினர் அங்கு வந்து பிரச்சனையை கிளப்பினர். "நீங்கெல்லாம் இங்கே வரக்கூடாது.. தகனமும் செய்யக்கூடாது.. இது எங்க இடம், சடலத்தை கொண்டு போய் நாக்லா லால் தாஸ் என்ற இடத்தில் எரியுங்கள்" என்று சொல்லி தகராறு செய்துள்ளனர்.. அந்த நாக்லா லால் தாஸ் என்ற இடம், இவர்களின் கிராமத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இடமாகும்.

 பிராமணர்கள்

பிராமணர்கள்

தாகூர் சமுதாயத்தினர் இப்படி முரண்டு பிடிக்கவும், பூஜாவின் கணவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.. "எங்க எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களின் தகனத்திற்காக குறிக்கப்பட்ட ஒரு இடம் பிராமணரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.. அதனால் திரும்பவும், இதை மீட்க முடிவு செய்துள்ளோம்.. பூஜாவின் உடலை எரித்துவிட்டு, அனைவருமே அந்த இடத்தை பயன்படுத்த உள்ளோம்' என்று சொல்லி பூஜாவின் சடலத்தை கீழே கிடத்தினர்..

 4 வயது மகன்

4 வயது மகன்

இதற்கான பூஜைகளும் தயார் ஆனது.. பூஜாவின் 4 வயது மகன் கொள்ளி வைக்கவும் தயாரானான்.. அப்போதும் தாகூர் மக்கள் விடவில்லை.. அம்மாவுக்கு கொள்ளி வைக்க போன சிறுவனை தடுத்தனர்.. திரும்பவும் தகராறில் ஈடுபட்டனர். இந்த விஷயம், போலீசுக்கு போனது.. இதையடுத்து, போலீசாருடன், அந்த கிராமத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்த பேரும் திரண்டு வந்தனர்.. எல்லாரும் சேர்ந்து தாகூர் சமுதாய மக்களை சமாதானப்படுத்தினர்.

 6 மணி நேரம்

6 மணி நேரம்

யார் சொன்னாலும், அவர்கள் கேட்பதாக இல்லை.. பூஜாவின் சடலத்தை எரிக்க விடாமல் தடுத்து கொண்டே இருந்தனர்.. இப்படியே 6 மணி நேரம் போயிற்று.. பூஜாவின் சடலம் 6 மணி நேரமாக எரிக்கப்படாமல் மயானத்தில் அப்படியே கிடந்தது. கடைசிவரை தாகூர் சமுதாய மக்கள் இறங்கி வரவே இல்லை.. பிறகு 6 மணி நேரம் கழித்து, பூஜாவின் சடலத்தை 4 கிமீ தூரத்திற்கு எடுத்து சென்று, நாக்லா லால் தாஸ் என்ற தகன மைதானத்தில் வைத்து தகனம் செய்தனர்.

 சுமூகமாக தீர்ந்தது

சுமூகமாக தீர்ந்தது

இது சம்பந்தமாக போலீசார் சொல்லும்போது, இதுவரை பூஜா குடும்பத்தினர் எழுத்து பூர்வமாக புகார் தரவில்லை.. அதனால் எப்ஐஆரும் போடவில்லை... பிரச்சனை அமைதியாக தீர்க்கப்பட்டது.. இப்படி மேல் சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களை தகனம் கூட செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதம் என்பது எங்களுக்கு தெரியும்.. இருந்தாலும், சாதி அமைப்பு என்பது இந்திய சமுதாயத்தில் களைய முடியாமல், வேரூன்றி உள்ளது. பூஜா குடும்பமும் சமாதானத்தை விரும்பியது.. எங்களுக்கும் அமைதிதான் முக்கியம்.. பிரச்சனை தீர்ந்தது என்றார்.

 முஸ்லீம் மக்கள்

முஸ்லீம் மக்கள்

உண்மையில், இந்த நாட் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு என்று தனியாக இடம் இல்லையாம்.. 10 கிமீ தூரத்தில் இருக்கும், முஸ்லீம் சமுதாய மக்களுக்கம் இறந்தவர்களை புதைக்க வேறு இடம் இல்லை.. அதனால் அவர்கள், குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், தங்கள் வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆக.. முஸ்லிம் சமுதாய மக்களுக்கும் நிலம் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

 பொது மயானம்

பொது மயானம்

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சாதியை கட்டிக் கொண்டு அழுவார்கள் என தெரியவில்லை.. ஒவ்வொரு சாதிக்கும் தனி ஆஸ்பத்திரி கிடையாது.. தனி போலீஸ் ஸ்டேஷனும் கிடையாது.. அப்படி இருக்கும் போது சுடுகாட்டில் மட்டும் ஏன் சாதி பார்க்கிறார்கள்? என தெரியவில்லை.. சாதி வேறுபாடின்றி பொது மயானங்களை பயன்படுத்த எல்லோரையும் அனுமதித்தால்தான் இதற்கு முடிவு ஒரு முடிவு கட்ட முடியும்.. அரசுதான் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

English summary
caste issue: body nat woman taken pyre Thakurs oppose cremation near agra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X