ரயில்களில் மண்ட பத்திரம் மொமெண்ட்! இப்படி அட்டகாசம் பண்ணி எங்கதான்யா போறீங்க? கும்பமேளாவுக்கு தான்!
லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் ப்ரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரயில் நிலையங்களில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செல்வதற்கு போதிய ரயில் வசதி இல்லாததால் சக பயணிகளை, சில பயணிகள் தடிகளை கொண்டு தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள், யோகிகள், சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடிக்கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
देखें वीडियो, बिहार के रेलवे स्टेशन पर महा-बवाल, ईंट से मारकर तोड़ दिया गेट का शीशा...#Bihar #Train #Mahakumbh #Begusarai #BreakingNews pic.twitter.com/ABeSGXEYNJ
— Live Cities (@Live_Cities) February 15, 2025
குறிப்பாக மகர சங்கராந்தி தினத்தில் மூன்று கோடி பேரும், மௌனி அமாவாசை அன்று எட்டு கோடி பேரும், வசந்த பஞ்சமி அன்று மூன்று கோடி பேரும் புனித நீராடி உள்ளனர். அது மட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு தலைவர்களும், இந்திய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் புனித நீராடி இருக்கின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பூடான் மன்னர், மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அம்பானி குடும்பத்தினர், கௌதம் அதானி குடும்பத்தினரும் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கிறார்கள்.
I strongly criticise this disgraceful act. Some sick-minded Biharis caused chaos just because they couldn’t get on a train to Prayagraj. This isn’t devotion or 'cool'—it's just wrong.
— Litti Chokha x Bihar (@Littichokha4BR) February 14, 2025
But not all Biharis are like this.#Bihar #Mahakumbh #bihari pic.twitter.com/0L096lYBkz
இந்த நிலையில் பிரயாக்ராஜிக்கு போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலாக இது கருதப்படுகிறது. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் பல நாட்கள் காத்துக் கிடக்கிறது. இந்த நிலையில் பிரயாக்ராஜிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கடல் அலை போல திரண்டுள்ளது.
சில இடங்களில் ரயிலில் இடம் கிடைக்காததால் இன்ஜினில் ஏறி பயணம் செய்ய முயன்ற சம்பவங்களும் நடந்தது. இந்நிலையில், ரயில்களில் இடம் கிடைக்காததால், ரயில்கள் மீது கற்களை வீசியும் ஜன்னல்களை உடைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் ரயில் பயணிகளை அச்சமடைய செய்துள்ளது. ஏற்கனவே ரயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பயணிக்கும் பயணிகள் உட்புறமாக தாளிட்டுக் கொள்கிறார்கள். இதன் காரணமாக ஏசி கோச்சுகள், ஸ்லீப்பர் கோச்சுகள் என கிடைக்கும் அனைத்து ரயில்கள் மீதும் கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Can someone identify them and File UAPA and NSA
— Kartik Vikram (@iamkartikvikram) February 12, 2025
They are doing it intentionally
These are paid goona for sure
Look at them why someone wanted to vandalise the train#Mahakumbh#IndianRailways#MahaKumbh2025pic.twitter.com/zwAtlCMt7g
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமஷ்திபூர் பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மகா கும்பமேளா இன்னும் 12 நாட்கள் மட்டுமே நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல ரயில் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
Watch this video 👇 to see how the train coming back from Prayagraj Mahakumbh was vandalized. Strict action should be taken immediately against such anti-social elements 😠 who are damaging the country's property like this. pic.twitter.com/ncpc79gYQg
— DK JAIN (@dkj1308) February 13, 2025
பீகார் ரயில் நிலையத்தில் கதவு திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் கற்களை கொண்டும் செங்கற்களைக் கொண்டும் கதவுகளை உடைத்து திறக்க முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் மற்றொரு வீடியோவில் பயணிகள் சிலர் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, அதன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வழிவிடவில்லை என்பதற்காக தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பயணிகளை கொடூரமாக தாக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications