லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லாதான் போய்ட்டிருந்துச்சு.. திடீர்னு செருப்பால அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இது பாஜக கலாட்டா!

பாஜக எம்எல்ஏவை பாஜக எம்பி செருப்பால் அடித்த வீடியோ வைரலாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக எம்பியும், எம்எல்ஏவும் செருப்பால் அடித்துக்கொள்ளும் வீடியோ

    லக்னோ: நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க.. திடீர்னு செருப்பு எடுத்து பாய்ந்து பாய்ந்து அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி அடித்து கொண்டவர்கள் பாஜக எம்பியும், எம்எல்ஏவும்தான் என்பதுதான் விஷயமே!

    உத்திரபிரதேசம் சந்த் கபிர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில், பாஜக எம்பி சரத் திரிபாதி மற்றும் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    எல்லோருமே சேரில் உட்கார்ந்து அமைதியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையில் பேனரில் பெயர் சேர்க்கப்படாதது குறித்து காரசார விவாதம் எழுந்தது.

    வளரும் பாஜக.. அடக்க வேண்டிய கட்டத்தில் மமதா.. இடதுசாரிகளுடன் கை கோர்க்க மே.வ.காங். கோரிக்கை வளரும் பாஜக.. அடக்க வேண்டிய கட்டத்தில் மமதா.. இடதுசாரிகளுடன் கை கோர்க்க மே.வ.காங். கோரிக்கை

    செருப்பால் அடித்தார்

    செருப்பால் அடித்தார்

    திடீரென்று விவாதம் முற்றிப் போனது. ஒருகட்டத்தில் ஆத்திரம் தாங்காத எம்.பி சரத் திரிபாதி தனது காலில் இருந்த செருப்பை எடுத்து எம்எல்ஏ ராகேஷ் சிங் பேகலை அடிக்க ஆரம்பித்தார்.

    சரமாரி தாக்கு

    சரமாரி தாக்கு

    இதை அங்கிருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. உடனடியாக எம்எல்ஏ பேகலும் பதிலுக்கு திரிபாதியை தாக்கத் தொடங்கினார். ஆனால் அவர் வெறுங்கையால்தான் அடித்தார். எம்பியோ கடைசிவரை கையில் எடுத்த செருப்பை கீழே போடவில்லை.

    சமாதானம்

    சமாதானம்

    நிலைமை ரொம்ப மோசமாகி கொண்டே போனதை அடுத்து, அருகிலிருந்த கட்சி நிர்வாகிகளும் போலீஸ் அதிகாரி ஒருவரும் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிட்டார்கள்.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    ஒரு பேனரில் பெயர் விஷயத்துக்காக ஒரு எம்எல்ஏவும், எம்பியும் பொதுவான இடத்தில் இப்படி செருப்பால் தாக்கி கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி பாஜக மானத்தை வேகவேகமாக கப்பலேற்றி வருகிறது.

    English summary
    BJP MP Sarath Tripathi attack BJP MLA with his Shoe in Uttar Pradesh Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X