லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிமேல் எங்கும் பாஜக கொடிதான்.. எந்த கட்சியாலும் தோற்கடிக்கவே முடியாது.. உபி முதல்வர் யோகி பெருமிதம்

இனி வரும் காலங்களில் பாஜகவே வெற்றி பெறும் என்று யோகி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் எல்லா தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நேற்று, பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மணிப்பூர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின.. அதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே, ஏராளமான தொகுதிகளில் பாஜக கூட்டணியே முன்னிலையில் இருந்து வந்தது.

CM Yogi Adityanath says about BJP Win in Uttar pradesh By election

ஆனால் பீகாரில் மட்டும், சரிக்கு சரி சமானமாக இரு கூட்டணி கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு முன்னிலை வகித்தது.. விடிய விடிய நடந்த பரபரப்பில் இறுதியில் பாஜக கூட்டணியே வெற்றி வாகை சூடி உள்ளது.

அதுபோல, மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றத் தேர்தலில் 22 தொகுதிகளில் பாஜகவும் 6 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது.

தெலங்கானா, குஜராத் இடைத்தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.. அதேபோல, மணிப்பூரில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 4 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த நிலையில், இதில் 6 தொகுதிகளில் பாஜகவே மாஸ் வெற்றி பெற்றிருக்கிறது..

ரிசல்ட்: எடுத்த எடுப்பிலேயே தட்டித் தூக்கிய பாஜக.. செம கடுப்பாகி டிவியை ஆப் செய்துவிட்ட லாலு..!ரிசல்ட்: எடுத்த எடுப்பிலேயே தட்டித் தூக்கிய பாஜக.. செம கடுப்பாகி டிவியை ஆப் செய்துவிட்ட லாலு..!

பீகார் வெற்றிக்கு பிறகு இந்த உபி தேர்தல் ரிசல்ட்தான் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.. காங்கிரஸ் கோட்டையான உபியில், மறுபடியும் பாஜக தன் பலத்தை நிரூபித்துள்ளது.. இந்த வெற்றி தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "இடைத்தேர்தலில் பாஜக எதிர்பார்த்தது போல பெரும் வெற்றி பெற்றது... 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வென்றதை போலவே இப்போதைய இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இனிவரும் எல்லா தேர்தல்களிலும் பா.ஜ.கவே வெல்லும். எந்தக் கட்சியாலும் தோற்கடிக்க முடியாது" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

English summary
CM Yogi Adityanath says about BJP Win in Uttar pradesh By election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X