லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மா.. தங்கை.. மச்சானுடன் புடை சூழ வந்த ராகுல் காந்தி.. அமேதியில் வேட்புமனு தாக்கல்!

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கிறது. முதல்முறை அவர் தென்னிந்தியாவிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

52 பக்க ரபேல் ரிப்போர்ட்டில் இருக்கும் ரகசியம்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு! 52 பக்க ரபேல் ரிப்போர்ட்டில் இருக்கும் ரகசியம்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு!

வயநாட்டில் போட்டி

வயநாட்டில் போட்டி

வயநாட்டில் கடந்த வாரம்தான் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவர் அமேதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பெரிய பேரணி

பெரிய பேரணி

வயநாட்டில் வேட்புமனுவை தாக்கல் செய்தது போலவே பெரிய பேரணியுடன் ஆரவாரமாக அவர் அமேதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இரண்டு பக்கமும் மக்கள் அவரை பெரிய அளவில் வரவேற்று உற்சாகம் அளித்தனர்.

யார் உடன் இருந்தார்கள்

யார் உடன் இருந்தார்கள்

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இருந்தார். அதேபோல் உத்தர பிரதேச காங்கிரஸ் கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இருந்தார். அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரின் கணவர் ராபர்ட் வதோராவும் உடன் இருந்தார்.

ராகுல் காந்தி போட்டி

ராகுல் காந்தி போட்டி

வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு ராகுல் காந்தி மீண்டும் மக்கள் மத்தியில் பேரணி நடத்த இருக்கிறார். அமேதி தொகுதியில் பாஜக சார்பாக அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் இப்போதே சூடு பிடித்து இருக்கிறார்.

English summary
Congress Chief Rahul Gandhi files his nominations in Amethi after Wayanad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X