லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மிஸ் பிகினி" இப்போ காங்கிரஸ் வேட்பாளர்.. உத்தரபிரதேசத்தில் எழுந்த சலசலப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மிஸ் பிகினி இந்தியாவான அர்ச்சனா கவுதமை போட்டியிட காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மலிவான விளம்பரத்தில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

உத்திரப்பிரதேச சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மார்ச் மாதம் 7ஆம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பின் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பின் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா

 மிஸ் பிகினி இந்தியா

மிஸ் பிகினி இந்தியா

தற்போது உத்திரப்பிரதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வாக்காளர்களை கவர பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் போட்டியிட நடிகையும் பிகினி உடையில் கலக்கிய மிஸ் பிகினி இந்தியாவான அர்ச்சனா கௌதமை நிறுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், லட்கி ஹூன் லக் சக்தி ஹன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 50 பெண் வேட்பாளர்களை உள்ளடக்கிய 125 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் நவம்பர் 2021ல் காங்கிரஸில் இணைந்த அர்ச்சனா கெளதமின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

 கவர்ச்சி நடிகை அர்ச்சனா

கவர்ச்சி நடிகை அர்ச்சனா

ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய் மற்றும் அஃப்தாப் ஷிவ்தாசனி நடித்த கிரேட் கிராண்ட் மஸ்தி படத்தில் அர்ச்சனா கௌதம் பணியாற்றியதோடு, ஷ்ரத்தா கபூரின் ஹசீனா பார்க்கர் படத்திலும் அவர் நடித்துள்ளார். மிஸ் பிகினி இந்தியா 2018 போட்டியில் வென்ற பிறகு, மிஸ் காஸ்மோஸ் வேர்ல்ட் 2018 இல் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அவர் ஹாட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கேற்றியவர். மேலும் சமூக வலைதலங்களிலும் அவரது புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவதும், சில நேரங்களில் அவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் புகார்கள் எழும்.

 பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

இந்நிலையில் அர்ச்சனாவை களத்தில் இறக்கி உள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது. மிகவும் பழைய கட்சியான காங்கிரஸ் மலிவான விளம்பரத்தில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய உத்தரபிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, இரண்டு அடல்ட் படங்களில் நடித்தவர்கள் காங்கிரஸின் தேர்வாக இருப்பதாகவும், மலிவான விளம்பரம் மற்றும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தயாராக உள்ளதாகவும், அரசியல் சார்பற்ற வேட்பாளரை நிறுத்தி இருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியிடம் தீவிரத்தன்மை இல்லை என்பதும் அவர்களின் முதுமையும் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

 காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் விளக்கம்

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உத்தரப்பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங், பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அவர்களின் மனநிலையை காட்டுவதாக கூறியுள்ளார். மற்ற பெண்களைப் போலவே அர்ச்சனா மரியாதைக்கு தகுதியானவர் எனவும் ஒரு கலைஞனுக்கு அரசியல் களத்தில் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக காங்கிரஸ் கருத்தாகும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்கள் , முன்னேற நினைக்கும் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு இருப்பவர்கள் எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

English summary
The BJP has accused the Congress party of engaging in cheap publicity as it has fielded former Miss Bikini Indian Archana Gautam to contest the Hastinapur constituency in the Uttar Pradesh Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X