லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் எங்கள் கூட்டணியில்தான் உள்ளது.. சீட்டெல்லாம் கொடுத்திருக்கோம்.. குழப்பிய அகிலேஷ் யாதவ்!

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி சேர்ந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், பாஜக ஆகியவை தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.

<strong>ஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்!</strong>ஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்!

எத்தனை இடங்களில் போட்டி

எத்தனை இடங்களில் போட்டி

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. மொத்தமுள்ள 80 இடங்களில், 72 இடங்களில் மொத்தம் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிட இருக்கிறது. இதற்கான உடன்படிக்கை கடந்த சில நாட்களுக்கே முன்பே செய்யப்பட்டுவிட்டது.

3 இடங்களில் போட்டி

3 இடங்களில் போட்டி

இந்த நிலையில் இந்த கூட்டணியில் தற்போது ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இணைந்து இருக்கிறது. அதன்படி அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இந்த கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்றுதான் கையெழுத்தானது.

என்ன கூறினார்

என்ன கூறினார்

இதுகுறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ''நாங்கள் இப்போதும் காங்கிரஸ் உடன் கூட்டணியில்தான் இருக்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில்தான் இப்போதும் இருக்கிறோம். என்ன காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிருக்கிறது. மற்ற தொகுதியில் தனியாக போட்டியிடுகிறது'' என்று கூறினார்.

சூப்பர்

சூப்பர்

இவர் கூறியது அங்கு இருந்த பலருக்கும் புரியவில்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது, பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி மொத்தம் 78 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் எப்போதும் போட்டியிடும் தொகுதியான ரேபரேலி, அமேதியில் தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடவில்லை. இதைத்தான் காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது என்று அகிலேஷ் கிண்டலாக கூறியுள்ளார்.

English summary
Congress is still in our Alliance says Akhilesh Yadav with bizarre explanations in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X