லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடக்கமே சவால்.. யோகியின் ஸ்டிராங் ஸோனில் களமிறக்கப்பட்ட பிரியங்கா.. காங்கிரஸ் மாஸ் திட்டம்!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுவாக இருக்கும் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முழு நேர அரசியலில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிரடி- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுவாக இருக்கும் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாஜக இப்படி ஒரு அரசியல் திருப்பத்தை எதிர்பார்த்து இருக்காது என்றுதான் கூற வேண்டும். பாஜக மட்டுமல்ல உத்தர பிரதேசத்தில் உள்ள முக்கிய மாநில கட்சிகளான சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இந்த அதிரடியை எதிர்பார்த்து இருக்காது என்றுதான் கூற வேண்டும்.

    Congress posed Priyanka Gandhi as the direct opponent for BJP Yogis strong zone

    உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடத்தில் தேசிய அரசியலே பரபரப்பிற்கு உள்ளாகி உள்ளது.

    உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக மாறியுள்ளார். 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசம்தான் லோக் சபா தேர்தலில் மிக முக்கியமான மாநிலம் ஆகும். அதில் 30 தொகுதிகள் வரை உத்தர பிரதேச கிழக்கு பகுதிக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புல்பூர், அலஹாபாத் (பிரயாக்ராஜ்), பைசாபாத், அம்பேத்கார் நகர், பாரெய்ச், கைசெர்கஞ்ச், ஷ்ரவஸ்தி, பஸ்தி கோரக்பூர், குஷி நகர், லால்கஞ்ச், ஆஸம்கார்க், காசிப்பூர், வாரணாசி, மிர்சாபூர், ரேபரேலி ஆகிய முக்கியமான தொகுதிகள் இதில் வருகிறது. இங்கு இருக்கும் 30 தொகுதிகள்தான் உத்தர பிரதேசத்தில் கட்சிகளின் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும்.

    இங்கு இருக்கும் கோரக்பூர் தொகுதியில் இருந்துதான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பியாக தேர்வானார். இந்த கிழக்கு உத்தர பிரதேசத்தில்தான் பாஜக சென்ற லோக் சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்றது. யோகி ஆதித்யாநாத்தின் கோட்டை என்று கூட இந்த பகுதி கூறப்படுகிறது .ரே பரேலி, ஆஸம்கார்க், கோரக்பூர், அலஹாபாத் (பிரயாக்ராஜ்), பைசாபாத், அம்பேத்கார் நகர் ஆகிய பாஜகவின் வலுவான தொகுதிகள் இங்குதான் உள்ளது.

    இங்குதான் தற்போது பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். யோகிக்கு எதிராக நேருக்கு நேர் லோக் சபா தேர்தலுக்காக பிரியங்கா களமிறங்கியுள்ளார். பிரியங்காவின் முதல் தேர்தல் மற்றும் அரசியல் வாழ்க்கையே மிகப்பெரிய சவாலாக தொடங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

    அதேபோல் இதே கிழக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும் வாரணாசி தொகுதியில் இருந்துதான் பிரதமர் மோடியும் தேர்வானார். மோடி மீண்டும் அதே தொகுதியில்தான் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.அப்படி போட்டியிடும்பட்சத்தில் இங்கு பிரியங்கா காந்தியின் செயல்பாடு பெரிய முக்கியத்துவம் பெறும். காங்கிரஸ் பல திட்டங்களுடன்தான் இவரை இங்கு களமிறக்கி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    இவ்வளவு சிறப்புகளை கொண்ட உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், பிரியங்கா காந்தி தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் நபராக மாறியுள்ளார். இங்கு அவர் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித் கொடுத்தார் என்றால், அவர் தேசிய அரசியலில் பெரிய புள்ளியாக மாற வாய்ப்பு இருக்கிறது. இவரின் ராசி எப்படி இருக்கிறது என்பதை 5 மாதங்கள் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!

    English summary
    Congress posed Priyanka Gandhi as the direct opponent for BJP Yogi's strong zone in Uttar Pradesh East.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X