லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமணத்திற்காக "அதை" செய்வதா.. ஏற்கவே முடியாது.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி!

திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: "இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவர், கல்யாணம் செய்து கொள்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது" என்று அலகாபாத் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு வழக்கில் இன்று மிக முக்கியமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது.. இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்து நபரை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.. அதற்காக ஒரு மாசத்துக்கு முன்பு இந்து மதத்துக்கும் மாறி இருக்கிறார்.

மதம் மாறி கல்யாணமும் நடந்துவிட்டது.. பிறகு அந்த தம்பதி, பாதுகாப்பு கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.. அந்த வழக்குதான் இன்று விசாரணைக்கு வந்தது.

 ‘Conversion just for marriage’s sake not acceptable’: Allahabad HC dismisses couple’s plea

நீதிபதி மகேஷ் சந்திரா திரிபாதி இதனை விசாரித்தார்.. அப்போது, கல்யாணம் செய்து கொள்வதற்காக மதம் மாறுவதை ஏற்று கொள்ள முடியாது என்று சொல்லி, 2014-ம் ஆண்டு நூர்ஜஹான் பேகம், அஞ்சலி மிஸ்ராவின் வழக்கையும் சுட்டி காட்டினார்.. இந்த விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டப்பிரிவு 226-ல் தலையிடுவதை விரும்பவில்லை என்றுகூறி, அந்த தம்பதியின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இதில் 2014-ல் நடந்த வழக்கு என்னவென்றால், நூர்ஜஹான் பேகம் என்ற பெண்ணும் இப்படித்தான் இந்து மதத்திலிருந்து மதம் மாறி, இஸ்லாமியர் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்.. இதுபோலவே அந்த தம்பதியும் பாதுகாப்பு கேட்டு, இதே அலகாபாத் ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்தனர்.

"சத்யமேவ ஜெயதே" என முழங்கும் நாட்டில்.. இந்த உண்மையை எங்கே போய் கேட்பது.. கமல் கேள்வி!

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒரு இஸ்லாமியரை கல்யாணம் செய்து கொள்ள, ஒரு இந்து பெண், இஸ்லாம் குறித்து எது ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல், கல்யாணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பினர்.. அத்துடன் அந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டனர்.. அதுபோலவே இந்த வழக்கிலும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

English summary
‘Conversion just for marriage’s sake not acceptable’: Allahabad HC dismisses couple’s plea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X