லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடங்காத கனிகா.. கொரோனா வந்தும் அட்டகாசம் தாங்கலை.. சிகிச்சைக்கு ஒத்துழைக்கலை.. டாக்டர்கள் எரிச்சல்!

மருத்துவமனை மீது பாடகி கனிகா கபூர் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: அடங்கவே இல்லையாம் கனிகா.. "சாப்பிடறதுக்கு 2 வாழைப்பழம்தான் தந்தாங்க... அதுகூட ஈ மொய்த்தது.. பசியிலதான் இருந்தேன்.. எனக்கு மருந்தும் தரல.. ஒழுங்கான சிகிச்சையும் தரல... என்று பேட்டியே தந்துவிட்டார்.. இதனால், ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஒரு நோயாளியை போல நடந்து கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் டைரக்டர் வலியுறுத்தி உள்ளார்!!

Recommended Video

    Singer Kanika Kapoor tested Positive

    உபியை சேர்ந்த கனிகா கபூர்... பிரபலமான பாலிவுட் பாடகி.. இவர் சமீபத்தில் லண்டனுக்கு சென்று நாடு திரும்பினார்.. லண்டனுக்கு போய்வந்ததுடன், 3 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

    இதற்கு பிறகு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார்... அந்த நேரம் இஷ்டத்துக்கும் வெளியே சென்று ஷாப்பிங் செய்திருக்கிறார்... இதன்பிறகுதான் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவும் ஆஸ்பத்திரிக்கு செக்-அப்புக்கு போனார்.. அப்போது டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

    லக்னோ

    லக்னோ

    இதையடுத்து, கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அங்கு அவர் ஒரு நோயாளி போலவே இல்லை.. ஏசி வசதியுடன் தனி ரூம் தந்துள்ளனர்.. அந்த ரூம் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கிளீன் செய்யப்பட வேண்டும்.. ஆனால் கனிகா ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்காமல் அட்டகாசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    ஆர்கே திமான்

    ஆர்கே திமான்

    இந்த விஷயம் ஆஸ்பத்திரி டைரக்டர் ஆர்கே திமானுக்கு சென்றுள்ளது.. அவரோ, "ஒரு ஸ்டாராக இல்லாமல் நோயாளியாக நடந்து கொள்ளுங்கள்" என்று கனிகாவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அப்போதும் கனிகாவின் சேட்டை குறையவில்லையாம்.. "என் ரூம் கிளீனாகவே இல்லை.. ஜெயில் மாதிரி இருக்கு.. என்னையும் ஒரு குற்றவாளி மாதிரி நடத்துறாங்க.. சாப்பிடறதுக்கு 2 வாழைப்பழம்தான் தந்தாங்க... அதுகூட ஈ மொய்த்தது.. ஆரஞ்சு பழம் மட்டுமே தந்தனர்.. சில சாப்பாடு தந்தாங்க.. ஆனால் அதெல்லாம் எனக்கு அலர்ஜி வந்துடும்.. அதனால நான் சாப்பிடல.. பசியிலதான் இருந்தேன்.. எனக்கு மருந்தும் தரல.. ஒழுங்கான சிகிச்சையும் தரல... என்று பேட்டியே தந்துவிட்டார் கனிகா.

    மீடியா

    மீடியா

    இதைக் கேட்டு அதிர்ந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், கனிகா சொல்வதில் உண்மை இல்லை என்று விளக்கம் தந்துள்ளது. வெளிநாடு போய் வந்ததும் இல்லாமல், வைரஸ் டெஸ்ட் பண்ணின விஷயத்தையும் வெளியே சொல்லாமல், ஆஸ்பத்திரியிலும் அடங்காமல் உள்ளதால் சோஷியல் மீடியாவில் எல்லாரும் கனிகாவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

    ஒத்துழைப்பு இல்லை

    ஒத்துழைப்பு இல்லை

    கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தநிலையில்தான் தற்போது அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒத்துழைப்பும் தராமல் உள்ளதால் கடுமையான அதிருப்தி இவர் மீது எழுந்துள்ளது. கனிகாவால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசூந்தரா ராஜே, அவரது மகனும் எம்பியுமான துஷ்யந்த் ஆகியோரும் அடங்கும்.

    English summary
    coronavirus: singer Kanika Kapoor complaints about hospital conditions and not providing her proper food
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X