லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

Google Oneindia Tamil News

லக்னோ: பசு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், பசு பாதுகாப்பு அமைப்புடன்(Gau Sewa Aayog) இன்று, ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, சட்டவிரோதமாக பசுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை, கண்டறிய வேண்டும். பசுவின் சிறுநீரும், சாணமும் உரமாக பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

cow protection very important Says Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

பசு பாதுகாப்பு அமைப்பு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று, பசு முகாம் எந்த நிலைமையில் உள்ளது. மாட்டுக் கொட்டகை, எந்தப் பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பசு பாதுகாப்பு நல வரி என 0.5% வரி மக்களிடம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கிராம பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதற்காக, 16 மாநகராட்சிகளுக்கு தலா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் கோசாலைகள் அமைக்கப்படுவதை கண்காணித்து, அதிகாரிகள் அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said cow protection is very important.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X