லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா- தினக்கூலி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ1,000 உதவி தொகை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

Google Oneindia Tamil News

லக்னோ: கொரோனாவால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள தினக் கூலி மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. இந்நிலையில் இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

Daily wage workers to get Rs 1,000 per day, says UP CM Yogi Adityanath

மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பல லட்சம் கூலி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்துக்காக தலா ரூ1,000 வழங்கப்படும் என்றார்.

கனிகா கபூர்

லக்னோவில் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பார்ட்டியில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, எம்பி துஷ்யந்த்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உத்தரப்பிரதேசம் முதல் டெல்லி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனிகா கபூரின் பார்ட்டியில் பங்கேற்ற பாஜக எம்பி துஷ்யந்த்சிங், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார்; ஜனாதிபதி மாளிகையில் விருந்தில் பங்கேற்றார். இது தொடர்பாக உபி அதிகாரிகள் கூறுகையில், கனிகா கபூர் கொரோனா இருப்பதை மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
UP Chief Minister Yogi Adityanath said the state government will give lakhs of daily wage labourers and construction workers Rs 1,000 per day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X