லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலித் எப்படி கோயிலுக்குள் போலாம்.. எப்படி சாமி கும்பிடலாம்.. 17 வயது சிறுவனை சுட்ட 4 வெறியர்கள் கைது

தலித் சிறுவனை சுட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

லக்னோ: "நீயெல்லாம் கோயிலுக்குள் போலாமா? அதெப்படி உள்ளே போய் சாமி கும்பிடலாம்" என்று கேட்டு 17 வயது தலித் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விகாஸ் குமார் ஜாதவ் என்ற பைனுக்கு 17 வயசுதான் ஆகிறது.. இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஜாதவ.. ரொம்ப ஏழையான விவசாயி.. இவர்கள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இவரது கிராமத்தில் ஜாதவ் மற்றும் வால்மீகி ஆகிய தலித் வகுப்பைப் சேர்ந்தவர்களும், தாக்கூர் என்ற உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர்.

சத்தமில்லாமல் இந்தியா சாதனை.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கைசத்தமில்லாமல் இந்தியா சாதனை.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை

தலித் மக்கள்

தலித் மக்கள்

இவர்களுக்குள் அடிக்கடி சாதீய மோதல் அடிக்கடி எழுமாம்.. அதுவும் தலித் மக்கள் கோயிலுக்கு போய்விட்டால் கொந்தளித்துவிடுவார்களாம். கடந்த வாரம் அங்குள்ள கோவிலுக்கு விகாஸ் குமார் ஜாதவ் போய் சாமி கும்பிட்டுள்ளார்.. "கோவிலுக்குள் நீ போக கூடாது என்று உயர் ஜாதியை சேர்ந்த சிலர் விகாஸை எதிர்த்துள்ளனர்.

4 இளைஞர்கள்

4 இளைஞர்கள்

ஆனால், அதையும் மீறி போய் போய் சாமி கும்பிட்டார் விகாஸ்.. இது அந்த உயர் சாதியினருக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 4 இளைஞர்கள் சேர்ந்து விகாஸ் குமாரை தலையிலும், உடம்பிலும் சரமாரியாக சுட்டு கொன்று விட்டனர்.

கொன்னுட்டாங்க

கொன்னுட்டாங்க

இதுகுறித்து விகாஸின் தந்தை சொல்லும்போது, "சிவன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டான்... அதை அந்த ஜாதிக்காரர்கள்.. அதையும் மீறி போய் சாமி கும்பிட்டு வந்தான்.. அந்த ஆத்திரத்துல 4 பேர் சேர்ந்து என் பையனை சுட்டு கொன்னுட்டாங்க.. ஆனா அவன் கோயிலுக்கு போன அன்னைக்கே நிறைய பேர் கூடி நின்று அவனை அடிச்சாங்க.. இதை பத்தி போலீசில் சொல்லியும் எதுவும் நடவடிக்கை எடுக்கல.. வீட்டுக்குள்ள இருந்து என் பையனை வெளியே இழுத்து போட்டு சுட்டுட்டாங்க" என்றார்.

விசாரணை

விசாரணை

இந்நிலையில், இந்த கொலையை செய்த குற்றவாளிகள் 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

தீண்டாமை

தீண்டாமை

"அன்னைக்கே போலீஸ் தலையிட்டிருந்தால், என் பையனை காப்பாற்றியிருக்கலாம்" என்று தந்தை கண்ணீர் விடுகிறார்.. ஆனால், "விகாஸ் கொலையில் ஜாதியோ அல்லது தீண்டாமையோ இருப்பதாக தெரியவில்லை" என போலீஸ் தரப்பில் சொன்னார்கள்.. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. எனினும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது!

English summary
dalit boy killed in uttar pradesh, and four held
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X