லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட தாதா திடீர் விலகல்

Google Oneindia Tamil News

லக்னோ: பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட தாதா திடீரென விலகினார்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது கடைசி கட்ட தேர்தலாகும். இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அது நடைபெறவில்லை, இந்த நிலையில் மோடியை எதிர்த்து முன்னாள் எம்பி ஆதிக் அகமது என்ற பிரபல தாதா களமிறங்குவதாக அறிவித்தார். தற்சமயம் பிரயக்ராஜ் நகரில் உள்ள நைனி சிறையில் இருக்கிறார்.

வேட்புமனு

வேட்புமனு

அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். சுயேச்சையாக நின்ற அவருக்கு தேர்தல் ஆணையம் தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.

5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி

தழள்ளுபடி

தழள்ளுபடி

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக 3 வாரங்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்களை 2 நீதிமன்றங்களும் தள்ளுபடி செய்தது.

விலகல்

விலகல்

இந்த நிலையில் தேர்தல் களத்திலிருந்து விலகுவதாக ஆதிக் அகமது நேற்றைய தினம் திடீரென அறிவித்தார். இது தொடர்பாக சிறையில் இருந்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

தாதா அறிக்கை

தாதா அறிக்கை

அதில் தான் பிரசாரம் செய்ய பரோல் வழங்கப்படாததால் போட்டியில் இருந்து விலகுகிறேன். மேலும் தனக்கு ஜனாநாயக உரிமை மறுக்கப்படுவதாகவும் அந்த தாதா அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

English summary
Former MP Atiq Ahmed, who was poised to fight the Lok Sabha elections against PM Narendra Modi in Varanasi as an Independent candidate, has decided to withdraw his nomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X