லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிவராத ரகசியங்கள்.. தப்பித்த தலைகள்.. "கேங்ஸ்டர்" விகாஸ் துபே என்கவுண்டரும் மறைக்கப்படும் மர்மமும்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேவின் பின்னணி குறித்தும், அவருக்கு இருந்த பெரிய தொடர்புகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளது.

Recommended Video

    சுட்டுக்கொல்லப்பட்ட vikas dubey... மறைக்கப்பட்ட மர்மங்கள்

    உத்தர பிரதேசத்தை உலுக்கிய தாதா விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கான்பூரில் 8 போலீசாரை கொன்ற வழக்கில் இவர் தேடப்பட்டு வந்தார். ஒரு வாரமாக தேடப்பட்டு வந்த விகாஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேசத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று உத்தர பிரதேசம் நோக்கி இவரை அழைத்து வந்த போது ஏற்பட்ட ஜீப் விபத்தில் இவர் தப்பிக்க முயன்று இருக்கிறார். அப்போது போலீசார் இவரை என்கவுண்டர் செய்துள்ளனர்.

    வாட்டசாட்ட உடம்பு.. ரிச் லுக்கு.. கூடவே பிறந்த கெத்து.. வாட்டசாட்ட உடம்பு.. ரிச் லுக்கு.. கூடவே பிறந்த கெத்து.. "வெட்டிருவேன்", ஸ்வப்னாவின் திகில் பக்கங்கள்

    பெரிய தொடர்பு

    பெரிய தொடர்பு

    இந்த நிலையில் விகாஸ் துபேவிற்கு பின் நிறைய பெரிய கைகளின் தொடர்புகள், போலீசார் உடன் தொடர்புகள் நிறைய இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சி என்று இல்லாமல் நிறைய அரசியல் கட்சிகள் உத்தர பிரதேசத்தில் இவரை வளர்த்துவிட்டு இருக்கிறது. இவரால் வளர்ந்து இருக்கிறது. உத்தர பிரதேச அரசியலின் அடிப்படை கட்டமைப்பு தெரிந்தவர்களுக்கு இது பெரிய அளவில் அதிர்ச்சி அளிக்காது.

    விகாஸ் துபே

    விகாஸ் துபே

    கான்பூரில் இத்தனை வருடமாக இருந்த விகாஸ் அங்கு முக்கிய அரசியல் தலைகளுக்கு தேர்தல் நேரத்திலும் மற்ற நேரங்களிலும் கூட உதவி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும், ஜாதி ரீதியாகவும் கூட இவர் உதவிகளை செய்து வந்துள்ளார். தேர்தலுக்கு ஆட்களை திரட்டுவது, பூத்களை பிடிப்பது, பணம் திரட்டி கொடுப்பது, எதிரிகளை "காலி'' செய்வது பல அரசியல் தலைகளுக்கு இவர் செய்யாத ''உதவியே'' இல்லை என்கிறார்கள்.

    எது தேவை?

    எது தேவை?

    ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி என்று இல்லாமல், தேவைக்கு தகுந்தபடி பல கட்சிக்கு உதவி இருக்கிறார். இவருக்கு எல்லா கட்சியிலும் சில நெருங்கிய நண்பர்கள் இருந்துள்ளனர். அதிலும் இவர் போலீசாருக்கும் கூட நெருக்கமாக இருந்துள்ளார். அதனால்தான் இவரை போலீசார் கைது செய்யும் முன்பே போலீசார் சிலர் அவருக்கு தகவல் அளித்து தப்பிக்க வைத்தனர் என்றும் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு இவர் தனது கோட்டையை உத்தர பிரதேசத்தில் உருவாக்கி உள்ளார்.

    மாறினார்

    மாறினார்

    ஆனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், உத்தர பிரதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிக்கும் செட்டாகவில்லை என்கிறார்கள். இவர் தனியாக உத்தர பிரதேசத்தில் ஆவர்த்தனம் செய்ய நினைத்தார் என்கிறார்கள். அதோடு பாஜக பிரமுகர் சந்தோஷ் சுக்லா போன்ற அரசியல் தலைவர்களையே இவர் கொலை செய்து, அரசியல் கட்சிகளிடம் பகையை வளர்த்துக்கொண்டார்.

    வளர்ந்த பகை

    வளர்ந்த பகை

    அதோடு போலீசார் சிலரை மிரட்டி இருக்கிறார். தனது பகுதியில் இருக்கும் சமஜ்வாதி, காங்கிரஸ், பாஜக தலைவர்களை மிரட்டி உள்ளார். இதெல்லாம் போக பாஜகவின் சுக்லாவை திட்டமிட்டு கொன்றுள்ளார். தன்னுடைய பவரை அரசியல் கட்சிகளுக்கு நிரூபிக்க அவர் இப்படி செய்தார் என்கிறார்கள்.இதுதான் போலீசார் அவரை முதலில் கைது செய்ய திட்டமிட்டதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

    யார் இருந்தனர்

    யார் இருந்தனர்

    திடீரென தனியாக உத்தர பிரதேசத்தில் ஆவர்த்தனம் செய்ய விகாஸ் திட்டமிட்ட பின்பே அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இவருக்கு பின் யார் எல்லாம் இருந்தனர் இவருடன் அரசியல் ரீதியாக யாரெல்லாம் தொடர்பு வைத்து இருந்தனர் என்று யாருக்கும் தெரியாது. இவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் எல்லாம் என்கவுண்டர் மூலம் மறைக்கப்பட்டுவிட்டது.

    பெரிய நெட்வொர்க்

    பெரிய நெட்வொர்க்

    இவரின் என்கவுண்டர் மூலம் இவரோடு தொடர்பில் இருந்த பெரிய நெட்வொர்க் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்தான் அந்த கேங்கின் தலைவர் என்றாலும் கூட இவரோடு தொடர்பு வைத்து இருந்த போலீசார் கேங் இருக்கிறது. சில அரசியல் தலைகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மாட்டும் முன், மொத்தமாக தற்போது விகாஸ் என்கவுண்டர் செய்யப்பட்டதால், இனி பல உண்மைகள் வெளியில் வரமால் போய் விடும் என்கிறார்கள்.

    English summary
    Uttar Pradesh Vikas Dubey: The story a gangster's connections and an encounter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X