லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகள் கிளீன் போல்ட்.. உத்தர பிரதேசத்தில் சாதிக்க போகும் யோகி.. உற்சாகத்தில் பாஜகவினர்!

உத்தர பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    By-election in Uttar Pradesh may give a boost to Yogi

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு நடக்கும் இடைத்தேர்தல் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    18 மாநிலங்களில் இன்று 51 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இரண்டு மாநில சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    அதேபோல் உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 11 சட்டசபை தொகுதிக்கும் இன்றுதான் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    காமராஜர் நகர் இடைத் தேர்தல்.. புதுச்சேரியில் தொடர் மழை.. வாக்குப் பதிவு மந்தம்காமராஜர் நகர் இடைத் தேர்தல்.. புதுச்சேரியில் தொடர் மழை.. வாக்குப் பதிவு மந்தம்

    ஏன் தேர்தல்

    ஏன் தேர்தல்

    உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பாக 8 எம்எல்ஏக்கள் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தல் எம்எல்ஏ லோக்சபா தேர்தலில் வென்று எம்பியாக தேர்வானார். மேலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 2 பேர் எம்பியாக தேர்வானார்கள்.

    காலியானது

    காலியானது

    இதனால் மொத்தம் 11 எம்எல்ஏ சீட்கள் காலியானது. இதில்தான் இன்று தேர்தல் நடக்கிறது. 11 இடங்களில் முன்பு 9 இடங்களை தன்னிடம் வைத்து இருந்த பாஜக கூட்டணி தற்போது 11 இடங்களையும் வெல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆம் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டு சேரவில்லை. ஆட்சிக்கு எதிரான வாக்குகள் இதனால் சிதறும் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவிற்கு இது சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளது.

    என்ன சூழ்நிலை

    என்ன சூழ்நிலை

    அதேபோல் மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவருமே இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரே ஒரு தொகுதியில் 20 நிமிடம் மட்டும் பிரச்சாரம் செய்தார். ஆனால் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஒரு தொகுதியில் கூட பிரச்சாரம் செய்யவில்லை.

    அதிகம்

    அதிகம்

    அதே சமயம் கடந்த ஒரு மாதமாக 11 தொகுதிகளிலும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இங்கு இரண்டு மாநில கட்சிகளையும் அவர் மிக மோசமாக விமர்சனம் செய்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் இவர் கடுமையாக எதிர்த்தார்.

    எங்கு உத்தர பிரதேசம்

    எங்கு உத்தர பிரதேசம்

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய் குமார் லல்லு மட்டும் காங்கிரஸ் சார்பாக தீவிரமாக இங்கு பிரச்சாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வேறு யாரும் இங்கு பிரச்சாரம் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் இந்த சுணக்கம் பாஜகவிற்கு பெரிய வெற்றியை தேடி தர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Elections 2019: By-election for 11 seats in Uttar Pradesh may give a boost to Yogi and BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X