லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லீம் பெண்கள் முகத்தில் அணிந்துள்ள பர்தாவை சோதிக்கணும்... பாஜக வேட்பாளர் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    முஸ்லீம் பெண்கள் முகத்தில் அணிந்துள்ள பர்தாவை சோதிக்கணும் - பாஜக வேட்பாளர்- வீடியோ

    லக்னோ: கள்ள ஓட்டை தடுக்க முஸ்லீம் பெண்கள் முகத்தில் அணிந்திருக்கும் பர்தாவை திறந்து பார்க்க வேண்டும் என முஸாபர்நகர் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யாண் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    நாடு முழுவதும் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று சர்னாபூர், கைரானா, முஸாபர்நகர், பிஜ்னோர், மீரட், பக்பட், காஜியாபாத், கௌதம புத்தா நகர் உள்பட 8 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது.

    Faces of women in burkhas are not being checked: says Muzaffarnagar BJP candidate Sanjiv Balyan

    ஓட்டு போட வாங்க வாக்காள பெருமக்களே... பூ தூவி, டிரெம்ஸ் அடித்து வரவேற்ற அதிகாரிகள்ஓட்டு போட வாங்க வாக்காள பெருமக்களே... பூ தூவி, டிரெம்ஸ் அடித்து வரவேற்ற அதிகாரிகள்

    இங்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் முஸாபர்நகர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யாண் போட்டியிடுகிறார்.

    இவர் தனது தொகுதியில் வாக்களித்து வரும் முஸ்லீம் பெண்களின் முகத்தில் உள்ள பர்தாவை திறந்து பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு சோதனை செய்யாமல் வாக்களிக்க வைப்பதால், யார் யார் ஓட்டுபோடுகிறார்கள். கள்ளஓட்டு எது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    மேலும் முஸ்லீம் பெண்கள் முகத்தில் அணிந்து இருக்கும் பர்தாவை திறந்து சோதிக்காமல் தேர்தலை நடத்தினால், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என தான் வலியுறுத்துவேன் என்றும் சஞ்சீவ் பல்யாண் கூறியுள்ளார்

    English summary
    Muzaffarnagar BJP candidate Dr. Sanjiv Balyan says. .Faces of women in burkhas are not being checked and I allege that fake voting is being done. If not looked into, I will demand a repoll
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X