லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எருதுகளாக மாறி ஏர் இழுத்த பெண்கள்.. உ.பி.யில் அப்படி என்னதான் நடக்கிறது?

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுத காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.

நாடு முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு கிராமங்களிலும் முக்கிய நகரங்களிலும் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அரசு சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காரிப் பயிர்கள்

காரிப் பயிர்கள்

மழை வேண்டி பல்வேறு கோயில்களில் யாகங்களும் நடத்தப்படுகின்றன. இன்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயிகள் பருவமழைக்காக காத்துகிடக்கின்றனர். வயல்களில் காரிப் பயிர்களான நெல் விதைகளை விதைக்க தயாராக உள்ளனர்.

பூஜை

பூஜை

ஆனால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வினோதமான முறையில் பெண்கள் பூஜைகளை செய்து மழையை வரவழைக்கின்றனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

எருதுகள் பூட்டப்படும் ஏர் கலப்பையை பெண்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிலத்தை உழுதனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில் ,நாங்கள் மழை வேண்டி நிலத்தை உழுகிறோம். ஜெனக மன்னர் காலத்தில் இருந்தே பெண்கள் கலகலப்பையை பிடித்து வயல்களில் ஏர் உழுதால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

பயிர்கள்

பயிர்கள்

வருணனை வேண்டி பெண்கள் ஏர் உழுவதும் 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பழக்கம். இதன் மூலம் மழை பெய்தால் எந்தவித கஷ்டமமும் இல்லாமல் பயிர்களை விளைவிக்க முடியும் என பெண்கள் நம்புகின்றனர்.

English summary
Farmers perform rituals to get sufficient rainfall in Bundelkhand, UP to please the Indira.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X