லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உபியில் ஆர்எஸ்எஸ் தொடங்கப் போகும் "ராணுவ" பள்ளி.. ஆர்மியில் சேர இங்கே பயிற்சி தருவாங்களாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 30-01-2020 | oneindia tamil

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முதலாவது ராணுவ பள்ளி வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படுகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷர் மாவட்டத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதலாவது ராணுவ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

    First RSS Army school to begin from April in UP

    ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் (ஆர்.பி.எஸ்.வி.எம்) என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்பள்ளியை தொடங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜூ பையாவின் பெயர் இப்பள்ளிக்கு சூட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இப்பள்ளியின் இயக்குநர் கர்னல் ஷிவ் பிரதாப் சிங் கூறுகையில், பள்ளிக்கான கட்டிடங்கள் அனைத்தும் தயாராகிவிட்டன. முதல் கட்டமாக 6-ம் வகுப்பில் 160 மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் மாணவர்கள் இணைவதற்கான பயிற்சிகள் இப்பள்ளியில் அளிக்கப்படும். பிப்ரவரி 23-ந் தேதி மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் நடைபெறும். மார்ச் 1-ந் தேதி பள்ளியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றார்.

    உ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்உ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்

    மேலும் பொது அறிவு, கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதலில் எழுத்துத் தேர்வும் பின்னர் மருத்துவ பரிசோதனைகளும் நடைபெறும். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் ஷிவ் பிரதாப் சிங் கூறினார்.

    இப்பள்ளியில் யுத்தத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு என 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர வேறு எந்த இடஒதுக்கீடும் இங்கு பின்பற்றப்படுவதில்லை. இங்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் பின்பற்றப்பட உள்ளது., இப்பள்ளிக்கான ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் பணியும் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடைய உள்ளது.

    இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இளம் ப்ளூ நிற சட்டை, அடர் ப்ளூ ட்ரவுட்சரும், ஆசிரியர்களுக்கு கிரே கலர் ட்ரவுசர் மற்றும் வெள்ளை சட்டை சீருடையாக இருக்கும்.

    Take a Poll

    English summary
    The Army school run by the RSS will begin in April in Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X