• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

காட்டுக்குள் பயங்கரம்.. தலித் பெண்ணுக்கு 30 வயசு.. நாசம் செய்தவர்களுக்கு 15 வயசு.. அதிர்ச்சி!

|

லக்னோ: தலித் பெண்ணுக்கு வயசு 30 ஆகிறது.. ஆனால், அவரை 7 சிறுவர்கள் சேர்ந்து நாசம் செய்தார்கள் என்றால் நம்ப முடிகிறது.. அந்த பிள்ளைகளுக்கு வயசு 15, 17 ஆகிறதாம்.. இப்படி ஒரு அட்டூழியம் வழக்கம்போல் உபியில் நடந்துள்ளது...!

உத்தரப் பிரதேச மாநிலம் பதவுன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 30 வயது.. தலித் பெண்.. ரொம்பவும் ஏழ்மையான பெண்.. இவரது கணவர் கை வண்டி இழுத்து கூலி வேலை செய்கிறார்.

இந்த பெண் அந்த பகுதியில் உள்ள காட்டிற்கு சென்று விறகு சேகரித்து வருவது வழக்கம்.. அப்படித்தான், கடந்த அக்டோபர் மாதம் விறகு எடுக்க காட்டுக்கு சென்றார்.. அங்கு 6 பேர் வந்து பெண்ணை, அலோக்காக தூக்கி சென்றுவிட்டனர்.

"சீக்ரெட்ஸ்".. முதல்வர் ஏன் அப்படி பேசினார் தெரியுமா.. ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும்.. செம!

வீடியோ

வீடியோ

மிக கொடுமையாக பலாத்காரமும் செய்துள்ளனர்.. அத்துடன் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டனர்.. தலித் பெண் கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.. சத்தம் போட்டு கத்தவும் விடவில்லை.. விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோ சோஷியல் மீடியாவில் வந்துவிடும் என்று மிரட்டியுள்ளனர்.. அத்துடன் கணவரையும், குழந்தைகளையும் கொலை செய்துவிடுவோம் மிரட்டி இருக்கிறார்கள்.

 ஒரே சமூகம்

ஒரே சமூகம்

அந்த 6 பேருமே, பெண்ணின் ஊரை சேர்ந்தவர்கள்தான்.. இதில் 5 பேர் சிறுவர்கள்.. 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.. இதில் 5 பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.. இவர்கள் மிரட்டி விட்டு போனதால், அந்த வீடியோவை நினைத்து, பெண்ணும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

விற்பனை

விற்பனை

இந்த சமயத்தில்தான், இந்த 6 பேரில் ஒருவர், பெண்ணின் பலாத்கார வீடியோ விற்க முயன்றுள்ளார்.. இவர்தான் அந்த பலாத்கார கும்பலில் வயசில் பெரியவர்.. வயது 20 ஆகிறது.. அந்த வீடியோவை வெறும் 300 ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார்... அந்த வீடியோ பலருக்கு விற்கப்பட்டுள்ளது.. திடீரென இந்த வீடியோவும் படுவைரலானது.. இது பற்றி அந்த பெண்ணுக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. பிறகு போலீசில் வந்து புகார் தந்துள்ளார்.. போலீசாரும் இது சம்பந்தமாகு வழக்கு பதிவு செய்து, அந்த 6 பேரையும் கைது செய்துள்ளனர்..

 இழப்பீடு

இழப்பீடு

ஒருத்தர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.. மற்ற 5 பேரும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மெடிக்கல் செக்கப் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.. இது சமுதாய பிரச்சனையாக உருவெடுத்துவிடக்கூடும் என்பதால், அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பெண்ணுக்கு உரிய நீதியும், உரிய இழப்பீடும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட எஸ்ஸ்பி சங்கல்ப் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 சிறுவர்கள்

சிறுவர்கள்

15 வயது சிறுவர்கள் 30 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. உபியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்றறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எத்தனையோ முறை கேள்வி கேட்டும், விமர்சனங்களை செய்தும், யோகி அரசு கொஞ்சம் கூட மாறியது போல தெரியவே இல்லை..!

 
 
 
English summary
Five minor boys raped 30 year old Dalit woman in Uttar Pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X