லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி.யில் புதிதாக 7 மாவட்டங்களில் வன்முறை வெடிப்பு.. கலவரத்தை தடுக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    நெருப்பில் கைவைத்துவிட்டதா பாஜக ? என்ன செய்ய போகிறது ?

    லக்னோ: வெள்ளிக்கிழமையான இன்று பிரார்த்தனைகளுக்குப் பிறகு ( பிற்பகலுக்கு பிறகு ) குறைந்தது ஏழு உத்தரப்பிரதேச மாவட்டங்களில் புதிதாக போராட்டங்கள் வெடித்தன.

    உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தடைகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநிலம் தழுவிய தடை உத்தரவுகளை மீறி புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஏழு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், பல பகுதிகளில் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

    கண்ணீர்ப்புகைக் குண்டு

    கண்ணீர்ப்புகைக் குண்டு

    இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அத்துடன் கூட்டத்தை விரட்டவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

     முசாபர் நகர்

    முசாபர் நகர்

    முசாபர்நகர், பஹ்ரைச், புலந்த்ஷாஹர், கோரக்பூர், ஃபிரோசாபாத், அலிகார் மற்றும் ஃபருகாபாத் ஆகிய மாவட்டங்களில் புதிதாக வன்முறை சம்பவங்களும் போராட்டங்களும் தொடங்கி உள்ளன.

     கல்வீச்சு

    கல்வீச்சு

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான கோரக்பூரில் மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்துள்ளது. இன்றைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இரண்டு நிமிட நீள வீடியோ ஒன்றை செய்தி நிறுவனமான வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு குறுகிய சாலை முனையில் மக்கள் கூட்டம் நிற்பதை காண முடிகிறது. மற்றொரு பக்கம் காவல்துறை அதிகாரிகள் நிற்கிறார்கள்.

    கற்கள் வீச்சு

    வீடியோவில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி, போலீஸ்காரர்களை நோக்கி ஆவேசமாக பேசுகிறார்கள். ஆரம்பத்தில் இதற்கு எதிர்வினையாற்றாத போலீஸ்காரர்கள் கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவர்களும் கற்களை எடுத்து பதிலுக்கு கற்களை வீசினர்.

    English summary
    Protestors & police personnel pelt stones at each other during demonstration against Citizenship Amendment Act and National Register of Citizens. . Violence has been reported from Muzaffarnagar, Bahraich, Bulandshahr, Gorakhpur, Firozabad, Aligarh and Farukhhabad districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X