லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரத்தத்தில் தண்ணீரை கலந்து 1000 பேருக்கு விற்பனை செய்த கும்பல்.. உபியில் கைது

ரத்தத்தில் தண்ணீரை கலந்து 1000 பேருக்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரத்தத்தில் தண்ணீரை கலந்து விற்பனை செய்த கும்பல்.. வீடியோ

    லக்னோ : எச்.ஐ.வி சோதனை செய்யாமல், குளுக்கோஸ் தண்ணீரைக் கலந்து கலப்பட ரத்தத்தை முறைகேடாக விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பலை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

    உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லேப் டெக்னீசியன்கள் முகமது நசீம் மற்றும் ராகவேந்திர சிங். கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் போலியான ரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவசரத் தேவைக்காக பணம் கேட்டு வரும் ஏழைகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களிடம் ரூ. 500 பணம் கொடுத்து ஒரு யூனிட் ரத்தத்தை எடுத்துள்ளனர்.

    gang sold contaminated blood mixed with saline water

    பின்னர் அந்த ரத்தத்துடன் குளுக்கோஸ் தண்ணீரைக் கலந்து இரண்டு யூனிட்டாக்கி அதனை மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு யூனிட் ரத்தத்தை அவர்கள் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த மோசடியை அவர்கள் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் இவர்களிடம் வாங்கிய ரத்தம் வித்தியாசமாக இருப்பதாக ஒரு மருத்துவமனை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆய்வகத்தில் அந்த ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த கலப்பட ரத்தம் விற்பனை விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கலப்பட கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது நசீம் உட்பட கும்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வாறு விற்கப்பட்ட ரத்தம் எச்.ஐ.வி உள்ளிட்ட எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 'அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து, அசல் ரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து ரத்தம் விற்பனை செய்யும்போது பயன்படுத்தியுள்ளனர். அனைத்தும் கச்சிதமாக இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்தக் கலப்பட ரத்தம் ஏற்றப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த கலப்பட ரத்தம் மோசடி உத்தரப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மருத்துவ தேவைக்காக ரத்தம் ஏற்றிக் கொண்ட பலரும், தங்களுக்கும் கலப்பட ரத்தம் ஏற்றப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    English summary
    The Special Task Force of Uttar Pradesh Police busted a gang that indulged in black marketing of blood. According to officials of the STF, they used to mix chemical and water with blood to convert one unit of to two units.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X