லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹத்ராஸ் பெண்.. பாஜக ஐடி செல் வெளியிட்ட வீடியோ உள்பட 3 வீடியோக்கள்.. அம்பலமான பலாத்கார முயற்சி

Google Oneindia Tamil News

லக்னோ: ஹத்ராஸ் வழக்கில் பலாத்கார புகாரை மறுத்து பாரதீய ஜனதா கட்சியின் ஐடி செல் குழுவினர் வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடியாக இந்தியா டுடே தொலைக்காட்சி 19 வயது பெண் பற்றி மூன்று வீடியோக்களை ஆய்வு செய்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களின் படி கொல்லப்பட்ட 19 வயது பெண் , தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைகளை விவரிப்பது தெளிவாக உள்ளதாக கூறியுள்ளது.

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக ஐடி செல் பிரிவு தலைவர் அமித் மால்வியா அண்மையில் வீடியோவைவெளியிட்டார். பலியான பெண்ணின் தாயார் காவல் நிலையத்திற்கு வெளியே காயமடைந்து உயிரிழந்த மகளுடன் தரையில் படுத்துக் கொண்டு கதறி அழுவதாக வீடியோ உள்ளது. அவரது தாய், தன் மகள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி குறிப்பிடவில்லை.

இதுபற்றி அமித் மால்வியா கூறும் போது, "ஹாத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவமனைக்கு வெளியே ஒரு நிருபர் தொடர்பு கொண்டார். அப்போது அந்த பெண் தன்னை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடந்ததாக கூறினார். ஆனால் நடந்த கொடூரத்தை அப்படியே வேறுமாறி மாற்றுவது நியாயமற்றது, கொடூரமான குற்றத்தை இன்னொருவருக்கு எதிராக இழிவுபடுத்தக்ககூடாது" என்றார்.

டெல்லிக்கு ராஜாவானாலும் நான் பள்ளிக்கு பிள்ளைதான்- திண்டுக்கல் திமுகவினரை சந்தித்த ஐ.லியோனி குசும்புடெல்லிக்கு ராஜாவானாலும் நான் பள்ளிக்கு பிள்ளைதான்- திண்டுக்கல் திமுகவினரை சந்தித்த ஐ.லியோனி குசும்பு

அமித் மால்வியா வீடியோ

அமித் மால்வியா வீடியோ

இந்நிலையில் இந்தியா டுடே ஹத்ராஸ் சம்பவங்கள் குறித்து பாஜக ஐடி செல் வெளியிட்ட வீடியோ உள்பட மூன்று வீடியோக்களையும் பகுப்பாய்வு செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவரின் மூன்று வீடியோக்களை கவனமாகக் கேட்டால், தன்னைத் தாக்கியவர்களால் தனக்கு பாலியல் கொடுமை நடப்பதை அவர் புகாராக கூறியிருப்பது தெரியும். பாதிக்கப்பட்டவரின் முதல் வீடியோ செப்டம்பர் 14 அன்று பதிவு செய்யப்பட்டது.

அத்துமீறலை எதிர்த்தார்

அத்துமீறலை எதிர்த்தார்

இந்த காட்சிகள் மருத்துமனைக்கு வெளியே படமாக்கப்பட்டதாக அமித் மால்வியா தனது பதிவில் கூறியிருக்கிறார். ஆனால் சம்பவம் நடந்த நாளில் சக உள்ளூர் பத்திரிகையாளர்களால் இது சண்ட்பா காவல் நிலையத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது ஆகும் இதை ஆஜ் தக்கின் லோக்கல் ரிப்போர்டர் ராஜேஷ் சிங்கால் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் அவர்களின் அத்துமீறல்களை எதிர்த்ததால் என்னை கழுத்தை நெரித்தார்கள் எனறு கூறிகிறார்.

குற்றவாளிகள் அடையாளம்

குற்றவாளிகள் அடையாளம்

இரண்டாவது வீடியோ அதே நாளில் ஹத்ராஸில் உள்ள பாக்லா அரசு மருத்துவமனையில் படமாக்கப்பட்டது. இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டினார். சம்பவம் மற்றும் தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து கேட்டதற்கு, நான் தீவனம் எடுக்க சென்றிருந்தேன் ... அதன்பின்னர் உள்ளே இழுத்துச் சென்றார்கள். கழுத்தை நெரித்தார்கள்... அத்துடன் அவர்கள் என்னை கட்டாயப்படுத்த முயன்றார்கள்... " என்று கூறுகிறார்.

இது இரண்டாவது முயற்சி

இது இரண்டாவது முயற்சி

மூன்றாவது வீடியோ ஆஜ் தக் மற்றும் இந்தியா டுடே டிவி உள்ளிட்ட பல்வேறு செய்தி நெட்வொர்க்குகளில் ஒளிபரப்பப்பட்டதாகும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ரவி மற்றும் சந்தீப் ஆகிய இரு நபர்களை கூறியிருந்தார். இந்த வீடியோ செப்டம்பர் 22 ஆம் தேதி அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் படமாக்கப்பட்டிருக்கிறது. தனக்கு எதிராக நடந்த இரண்டாவது முயற்சி இது என்றும் அவர் வீடியோவில் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். முதல் சம்பவத்தின் போது அங்கிருந்து ஓடி தப்பித்ததாக அந்த பெண் கூறியிருக்கிறார்" இவ்வாறு இந்தியா டுடே தனது செய்தியில் கூறியுள்ளது.

English summary
A careful hearing of three video statements of the Hathras case victim reveals she complained of forced sexual advances by her attackers. In the second clip, the victim identified the accused and in the third, she alleged that it was the second such attempt by the suspects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X