லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. "தலித் பெண் பலாத்காரமே செய்யப்படல".. ஏடிஜிபி ஷாக் தகவல்..உபியில் எகிறும் பரபரப்பு

ஹத்ராஸ் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தடயம் இல்லை என போலீஸ் கூறியுள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று அந்த மாநில ஏடிஜிபி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களை கண்டுபிடிக்கவில்லை, சாதி அடிப்படையிலான பதற்றத்தை தூண்டுவதற்காக சில மக்கள் இந்த விஷயத்தை திசை திருப்பியது தெளிவாகிறது" என்றும் ஏடிஜிபி கூறியுள்ளார்.

உ.பி.யின் ஹாத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கியதில் அந்தப் பெண் கொடூரமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உடலையும் நடுராத்திரிக்கு மேல் போலீஸார் முன்னிலையில் தகனம் செய்து விட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் சம்பவம்...உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்!! ஹத்ராஸ் சம்பவம்...உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்!!

பலாத்காரம்

பலாத்காரம்

பாலியல் பலாத்காரத்தை விட போலீஸாரே உடலை எரித்த சம்பவம்தான் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறு பிரேதப் பரிசோதனை விவகாரத்தில் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக உடலை வேகம் வேகமாக எரித்து விட்டனரா என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பொதுமக்கள்

பொதுமக்கள்

இதையடுத்து உறவினர்களும், பொதுமக்களும் அப்பகுதியில் போராட்டத்தில் இறங்கினர்... எனவே, ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் உயிரிழந்துள்ள விவகாரத்தை தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியுள்ள நிலையில், இப்போது ஆஸ்பத்திரி தரப்பில் ஒரு புதிய அறிக்கை வெளியானது.

காயங்கள்

காயங்கள்

அந்த அறிக்கையின் அடிப்படையில், ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி விக்ராந்த் பேட்டி தரும்போது,''உயிரிழந்த பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் இருக்கின்றன.. இருந்தாலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. இறுதியான, தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

புதிய திருப்பம்

புதிய திருப்பம்

இந்நிலையில், பாலியல் பலாத்காரம் நடக்கவே இல்லை என்று உபி. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் உத்தரபிரதேச கூடுதல் போலீஸ் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் சொன்தனாவது:

பலாத்காரம்

பலாத்காரம்

"இந்த அறிக்கையின் முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்... பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என்று முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது... கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்துவிட்டார் என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் கூறுகிறது.

விந்தணுக்கள்

விந்தணுக்கள்

எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களை கண்டுபிடிக்கவில்லை, சாதி அடிப்படையிலான பதற்றத்தை தூண்டுவதற்காக சில மக்கள் இந்த விஷயத்தை திசை திருப்பியது என்பதை தெளிவுபடுத்துகிறது. அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.. இதுதொடர்பாக தவறாக தகவல் பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்... டிஜிபியின் இந்த அறிவிப்பால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

English summary
Hathras Dalit girl: No rape in Hathras as per FSL report, says DGP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X