லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம் - பல மணிநேரத்திற்குப் பின் மன்னிப்பு கேட்ட உ.பி மாநில போலீஸ்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியின் உடையை காவலர் பிடித்து இழுத்த சம்பவத்திற்கு உத்தரபிரதேச காவல்துறை மன்னிப்பு c

Google Oneindia Tamil News

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியின் உடையை காவலர் ஒருவர் பிடித்து இழுத்த சம்பவத்திற்கு உத்தரபிரதேச காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர். இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ்... 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்!குஜராத்தில் ஒரு ஹத்ராஸ்... 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்!

ராகுல் பிரியங்கா பயணம்

ராகுல் பிரியங்கா பயணம்

பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து வியாழக்கிழமை ஹத்ராஸ் செல்ல முயன்றனர்.

தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி

தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை போலீசார் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். ராகுல்காந்தி கைது சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு

சனிக்கிழமை பயணம்

சனிக்கிழமை பயணம்

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி டுவீட் செய்திருந்தார். சனிக்கிழமையன்று ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புறப்பட்டனர். முழுவதும் போராட்டம் நடத்தினர்.

எல்லையில் போலீஸ் குவிப்பு

எல்லையில் போலீஸ் குவிப்பு

ராகுல், பிரியங்கா வருகையைத் தடுக்கும் பொருட்டு டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உத்தரபிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் நொய்டா நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர். எல்லைகள் சீல் வைக்கப்படவில்லை என்றாலும் வாகனங்கள் கடுமையான ஆய்வுக்குப் பின்பே அனுப்பப்பட்டன.

தொண்டர்கள் மீது தடியடி

தொண்டர்கள் மீது தடியடி

டெல்லி-நொய்டா நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கார், காங்கிரஸ் எம்.பி.க்களின் சிறிய பேருந்து வந்ததும் அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ், தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர்.

பிரியங்கா இந்திரா

பிரியங்கா இந்திரா

இதைப்பார்த்த பிரியங்கா காந்தி, உடனடியாக அங்கிருந்த தடுப்பு சுவரை தாண்டி குதித்து தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என காவல்துறையினரின் லத்தியை கையால் தடுத்து எச்சரித்தார். அப்போது அவரது பார்வையில் அனல் தெரித்தது. இதுகுறித்த வீடியோவும் போட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திரா காந்தியுடன் பிரியங்காவை ஒப்பிட்டு போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 போலீஸ் முரட்டுத்தனம்

போலீஸ் முரட்டுத்தனம்

பிரியங்கா காந்தி தடையை மீறி முன்னேறி வந்த போது ஒரு காவலர் பிரியங்காவின் குர்தாவை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். அப்போது பிரியங்கா அந்த காவலரை கோபப்பார்வை பார்த்தார். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

5 பேர் ஹத்ராஸ் பயணம்

5 பேர் ஹத்ராஸ் பயணம்

கொந்தளிப்பு அதிகரிக்கவே ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட 5 பேர் மட்டும் ஹத்ராஸ் செல்லலாம் என அனுமதி அளித்தது உத்தரபிரதேச மாநில அரசு. பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஹத்ராஸ் சென்ற ராகுல்,பிரியங்கா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தனர்.

கண்ணீருக்கு ஆறுதல்

கண்ணீருக்கு ஆறுதல்

பெண்ணின் தந்தையின் முன் தரையில் முழங்கால் போட்டு அமர்ந்து ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி, கண்ணீருடன் இருந்த தாயை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார் பிரியங்கா காந்தி. இந்த போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

பிரியங்காவின் குர்தாவை காவலர் பிடித்து இழுத்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது பல தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தியிடம் காவல்துறையினர் நடந்து கொண்ட சம்பவத்திற்கு உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். சம்பவம் நடந்து பல மணிநேரம் கழித்து வருத்தம் தெரிவித்துள்ள காவல்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி, பிரியங்காவிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட காவலர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
The Uttar Pradesh Police has apologized for the incident where a policeman grabbed Priyanka Gandhi's pants to offer her condolences to the family of a woman victim of the Hadras sexual assault incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X