லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்!

தலித் இளைஞர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: தலித் இளைஞர் வேறு சமூக பெண்ணை காதலித்து விட்டார்.. இதற்காகவே அவரை உயிருடன் கொளுத்தி விட்டுள்ளனர். மகன் உயிருடன் எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டதுமே அவரது தாய் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். உத்திரபிரதேசத்தில் நடந்துள்ள இந்த சாதீய தீ சம்பவம் நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது!

வடமாநிலங்களின் நிறைய பகுதிகளில் சிறுபான்மையினரும், தலித்துகளும் மதவாத தாக்குதலுக்கு இன்னமும் உள்ளாகி வருகின்றனர். இதில் அதிகமாக நடப்பதும், குற்றங்கள் பெருகி வருவதும் உத்திரபிரதேசத்தில்தான். என்பது பொதுவான கருத்து. இப்போதும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஹர்டோய் மாவட்டம் பாதேசா பகுதியை சேர்ந்தவர் மோனு. தலித் சமூகத்தை சேர்ந்த மோனுவுக்கு வயசு 20! இன்னொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மோனு காதலித்து வந்துள்ளார். அந்த பெண் இவரைவிட சற்று உயர்ந்த சமூகம் என தெரிகிறது.

கோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்கோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்

ஆத்திரம்

ஆத்திரம்

அந்த பெண்ணை பார்க்க கடந்த சனிக்கிழமை மோனு சென்றிருந்தார். விஷயம் கேள்விப்பட்ட பெண் வீட்டினரோ, மோனுவை பிடித்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலமாக தாக்கி இருக்கிறார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவரை உயிரோடு தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

மாரடைப்பு

மாரடைப்பு

அடைபட்ட வீட்டுக்குள் உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக் கொண்டு அலறினார் மோனு. அந்த அலறல் சத்தம் கேட்டுதான் அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று மோனுவை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர். ஆனால் வழியிலேயே மோனுவின் உயிர் பிரிந்தது. தன்னுடைய மகன் உயிரோடு எரிக்கப்பட்டது பற்றி கேள்விப்பட்டதுமே அவருடைய அம்மா அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார்.

மாரடைப்பு

மாரடைப்பு

ஆணவ கொலை ஒரு பக்கம், மாரடைப்பு மறு பக்கம் நடப்பதை கண்டு மோனுவின் உறவினர்கள் கொதித்து போய்விட்டனர். இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தாலும், அநியாயமாக 2 உயிர்கள் பலியானதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

காங்கிரஸ்

காங்கிரஸ்

"பாஜக ஆட்சியில், ஒரு தலித் உயிருடன் எரித்து கொல்லப்பட்டிருக்கிறார். இது மனிதாபிமானமற்ற செயல், வெட்கக்கேடான செயல். உபியில் பெண்கள் பாதுகாப்பு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு இல்லை" என்று காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்துக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Honour Killing dalit man burnt alive in UP Congress Party slams BJP Gov
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X